தொடருமா பா.ஜ.க. கூட்டணி?: 24ம் தேதி பா.ம.க. முடிவு, 25ல் மதிமுக
சென்னை:
தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்தும், மத்திய அமைச்சரவையிலிருந்தும் திமுக விலகியுள்ள சூழ்நிலையில்பாட்டாளி மக்கள் கட்சியின் உயர் மட்டக் குழுக் கூட்டம் சென்னையில் வரும் 25ம் தேதி நடைபெறவுள்ளது.
அதே போல இன்று நடப்பதாக இருந்த மதிமுக உயர் மட்டக் கூட்டம் 24ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
கூட்டணியில் இருந்து மதிமுக விலகும் என்ற எதிர்பார்ப்பு நிலவினாலும் பாட்டாளி மக்கள் கட்சி விலகாது என்றேதெரிகிறது.
அதேசமயம், கூட்டணியில் அதிமுகவை சேர்க்கக் கூடாது என்று பா.ஜ.க.வுக்கு கோரிக்கை வைத்து தீர்மானம்நிறைவேற்ற அக் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை அக் கட்சியின் அவைத் தலைவர் எல்.கணேசன், மத்திய அமைச்சர்கள்செஞ்சி ராமச்சந்திரன், கண்ணப்பன் ஆகியோர் தொடர்ந்து சந்தித்து ஆலோசித்தவண்ணம் உள்ளனர். இதில்கண்ணப்பன் போன்றவர்களுக்கு கூட்டணியில் இருந்து விலக விருப்பம் இல்லை என்றும் கூறப்படுகிறது.
இந் நிலையில் 24ம் தேதி சென்னையில் கட்சியின் உயர் மட்டக் குழுவை கூட்டுமாறு அவர்களிடம் வைகோகூறியுள்ளார்.
அன்றைய தினம் தனது முடிவை வைகோ அறிவிப்பார்.
-
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா












Click it and Unblock the Notifications