வைகோ: இன்று மீண்டும் கூடுகிறது பொடா மறு ஆய்வுக் குழு
டெல்லி:
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வழக்கை பொடா மறு ஆய்வுக் குழு விசாரிப்பதற்கு தமிழக அரசுதெரிவித்திருந்த பூர்வாங்க ஆட்சேபணைகளுக்கு மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
இதையடுத்து இன்று கூடும் பொடா மறு ஆய்வுக் குழு வைகோ விஷயத்தில் முக்கிய முடிவை எடுக்கலாம் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
நீதிபதி சகாரியா தலைமையிலான பொடா மறுஆய்வுக் குழு, பொடா சட்டத்தின் கீழ் வைகோ கைதுசெய்யப்பட்டது குறித்து விசாரணை நடத்தி வருகிறது. இந் நிலையில் நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும்வழக்கை பொடா மறுஆய்வுக் குழு விசாரிப்பது நீதிமன்ற நடவடிக்கைகளில் தலையிடுவதாக இருக்கும் என்றுதமிழக அரசு தனது ஆட்சேபத்தை அக் குழுவிடம் தெரிவித்தது.
இது தொடர்பாக தனது விளக்கத்தை அளிக்குமாறு மத்திய அரசை பொடா மறுஆய்வுக் குழு கேட்டிருந்தது.இதையடுத்து மத்திய அரசு தனது விளக்க மனுவை அளித்துள்ளது.
அதில், பொடா வழக்கு நீதிமன்ற விசாரணையில் இருந்தாலும், பொடா மறு ஆய்வுக் குழு வழக்கு குறித்துமுடிவெடுத்தால் அது செல்லுபடியாகும் என்று பொடா சட்டத்தில் மத்திய அரசு கடந்த வாரம் திருத்தம் கொண்டுவந்திருப்பதும், தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு வாய்மொழி ஆதரவு அளிப்பது பொடா சட்டத்தின் கீழ்குற்றமாகாது என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்திருப்பதும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
இதையடுத்து இன்று காலை பொடா மறு ஆய்வுக் குழு கூடுவதாக இருந்தது. ஆனால், மும்பையில் இருந்துகிளம்பிய குழுவின் தலைவர் சகார்யா வந்த விமானம் பனி மூட்டம் காரணமாக டெல்லியில் தரையிறங்கமுடியவில்லை.
இதையடுத்து அந்த விமானம் திரும்பிவிட்டது. இதையடுத்து இக் கூட்டம் பிற்பகலுக்கு மேல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு அளித்துள்ள விளக்கம், உச்ச நீதிமன்றம் சமீபத்தில் வெளியிட்ட தீர்ப்பு ஆகியவை குறித்துஆலோசிக்கப்பட்டு வைகோ விவகாரத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிபிசிஐடி அலுவலகத்தில் கோபால் கையெழுத்து
பொடாவில் கைதாகி ஜாமீன் பெற்ற நக்கீரன் ஆசிரியர் கோபால், இன்று சிபிசிஐடி தலைமை அலுவலகம் மற்றும்பூந்தமல்லி பொடா நீதிமன்றம் ஆகியவற்றில் ஆஜராகி கையெழுத்துப் போட்டார்.
கோபாலுக்கு ராஜாமணி என்பவரின் கொலை வழக்கில் ஈரோடு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் கொடுத்துள்ளது.அதன்படி தினசரி காலை 10 மணிக்கும் மாலை 5 மணிக்கும், சென்னையில் உள்ள சிபிசிஐடி தலைமைஅலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும்.
இதேபோல,பொடா வழக்கில் விதிக்கப்பட்ட ஜாமீன் நிபந்தனைப்படி பூந்தமல்லி பொடா நீதிமன்றத்தில் வாரத்தின்முதல்நாள் ஆஜராகி கையெழுத்துப் போட வேண்டும்.
-
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications