திமுக விலகல் குறித்து கவலையே படாத பா.ஜ.க.
சென்னை:
திமுகவுடனான உறவு முறிந்தது குறித்து பா.ஜ.க. குறிப்பாக, அத்வானி தலைமையிலான கோஷ்டிகவலைப்பட்டதாகத் தெரியவில்லை.
அந்த கோஷ்டியைச் சேர்ந்த பா.ஜ.க. தலைவர் வெங்கையா நாயுடு சென்னையில் நிருபர்களிடம் பேசுகையில்,
திமுகவின் மறியல் குறித்து நான் கூறிய கருத்து சாதாரணமானது, பொதுவானது. திமுகவை விமர்சிக்க வேண்டும்என்ற எண்ணத்தில் அப்படிக் கூறவில்லை. இருப்பினும், ஆட்சியில் பங்கேற்றுக் கொண்டே, அந்த ஆட்சிக்குஎதிராக போராட்டம் நடத்துவது ஆரோக்கியமானது அல்ல என்பதை மீண்டும் கூற விரும்புகிறேன் என்றார்.
இதன்மூலம் திமுகவை மீண்டும் சீண்டியுள்ளார்.
அதே நேரத்தில் திமுக மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர முன் வந்தால் வரவேற்போம். அடுத்தநாடாளுமன்றத் தேர்தலிலும் இந்தக் கூட்டணி தொடரவே விரும்புகிறோம் என்றார்.
முன்னதாக சென்னை வந்த அவர் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து சமரசம் செய்வார் என்று முதலில்கூறப்பட்டது. ஆனால் அவர் கருணாநிதியை சந்திக்கவில்லை.
மேலும், மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, ராஜா ஆகியோரின் ராஜினாமா கடிதங்களை பிரதமர் வாஜ்பாய்உடனடியாக ஏற்றுக் கொண்டு குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்துவிட்டார்.
எனவே, திமுகவை சாந்தப்படுத்தும் உத்தேசம் பா.ஜ.க. தலைமைக்கு இல்லை என்பது தெளிவாகியுள்ளது.
திமுக விஷயத்தில் பிரதமர் வாஜ்பாய்க்கு ஒரு கருத்து இருந்தாலும், இப்போது அத்வானி கோஷ்டி தான் இதில்முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறது.
மேலும் இந்த விவகாரம் குறித்து இதுவரை பிரதமர் வாஜ்பாயோ, துணைப் பிரதமர் அத்வானியோகருணாநிதியைத் தொடர்பு கொண்டு பேசவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications