வீரப்பன் கும்பல் தமிழக காட்டுக்குள் ஊடுருவல்!
ஈரோடு:
நீண்ட இடைவெளிக்குப் பிறகு சந்தனக் கடத்தல் வீரப்பன் கும்பல் தமிழக வனப் பகுதிக்குள் ஊடுருவியுள்ளதாகத்தகவல்கள் வெளியாகியுள்ளன.
கூடுதல் டிஜிபி நடராஜ், தமிழக அதிரடிப்படை தலைவராக 2 ஆண்டுகளுக்கு முன்பு பதவியேற்றார். அதன் பின்னர்வீரப்பன் கும்பலுக்கு உளவு சொல்பவர்களைத் தேடிப் பிடித்து அவர்களை அரசுக்குச் சாதகமாக மாற்றும் பணியைமுடுக்கி விட்டார். இதற்கு நல்ல பலன் கிடைத்தது.
அதிரடிப்படை நடமாட்டம் குறித்து உளவு சொல்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்காததால், செயலிழந்த வீரப்பன்கும்பல் தமிழக காட்டு எல்லைக்குள் வருவதைத் தவிர்த்தது. தொடர்ந்து கர்நாடக வனப் பகுதிகளிலேயே சுற்றிவந்தது. இருப்பினும் வீரப்பன் கும்பலைப் பிடிக்க முடியவில்லை.
இந் நிலையில், சமீபத்தில் புதிய தலைவராக விஜயக்குமார் பதவியேற்றதும், வீரப்பன் கும்பலைப் பிடிக்க புதியதிட்டம் வகுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, நீண்ட காலமாக தமிழக காட்டு எல்லைக்குள் வராமல் இருந்த வீரப்பன் கும்பலைச் சேர்ந்த சந்திரேகெளடா, சேத்துக்குளி கோவிந்தன் ஆகியோர் தமிழக காட்டு எல்லைக்குள் ஊடுருவியுள்ளதாகத் தகவல்கள்வெளியாகியுள்ளன.
தலைமலை, கேர்மலம், கடம்பூர், அந்தியூர், கேரங்காடி, பத்திரப்படுகு ஆகிய இடங்களில் வீரப்பன் கும்பலின்நடமாட்டம் இருப்பதாக வந்த தகவலையடுத்து அங்கு அதிரடிப்படை வீரர்கள் அதிக அளவில் குவிக்கப்பட்டு,தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
இதற்கிடையே, சிறு சிறு கிராமங்களில் நிரந்தரமாக அதிரடிப்படை வீரர்களை தங்க வைக்கப்பட்டுள்ளனர்.தற்போது இந்தக் கிராமங்களில் உள்ள அதிரடிப்படை வீரர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ராணுவத்தினரை களமிறக்க கர்நாடகம் முடிவு:
இந் நிலையில் சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பிடிக்க முன்னாள் ராணுவத்தினரைப் பயன்படுத்த கர்நாடக அரசுமுடிவு செய்திருப்பதாக முதல்வர் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
பெங்களூரில் முன்னாள் ராணுவத்தினரின் ஊர்வலத்தைக் கொடியசைத்துத் தொடக்கி வைத்து கிருஷ்ணாபேசுகையில், வட கிழக்கு ராணுவ முகாம்களில் பணியாற்றிய முன்னாள் ராணுவத்தினரை வீரப்பனைப்பிடிப்பதற்குப் பயன்படுத்தும்படி கர்நாடக அரசு தலைமைச் செயலாளர் படேலிடம் கூறியுள்ளேன்.
காட்டுப் பகுதிகளில் இவர்களுக்கு உள்ள அனுபவம் சிறப்பு அதிரடிப் படைக்குப் பெரும் உதவியாக இருக்கும்.எம்.எம். மலைப்பகுதியில் வீரப்பன் கும்பல் அதிரடிப் படையினரால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கு முன் தெரிவித்தது போல், இப்போது அவர்கள் எப்போது பிடிபடுவார்கள் என்ற கால நிர்ணயத்தை நான்கூற விரும்பவில்லை. ஆனால் முன்னாள் எம்.எல்.ஏ. நாகப்பாவின் கடத்தலுக்குப்பின் வீரப்பனைத் தேடும் பணிமுடுக்கிவிடப்பட்டுள்ளது என்றார்.
-
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications