ஐ.ஜியின் ஜீப் மோதி 6 வயது சிறுவன் சாவு
சென்னை:
சென்னை காவல்துறை ஐ.ஜி ஷியாம் சுந்தரின் ஜீப் மோதி ஒரு குடும்பமே படுகாயம் அடைந்தது. இதில் 6 வயதுசிறுவன் பரிதாபமாக இறந்தான்.
ஐ.ஜி. ஷியாம் சுந்தரின் கார் டிரைவர் பிரைட் ஐசக் சாமிநாதன். ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பிரைட்ஆயுதப் படை டிரைவர் ஆவார். ஷியாம் சுந்தரை பணியிலிருந்து அவரது வீட்டில் விட்டு விட்டு ஜீப்பில் தான்தங்கியிருந்த கொரட்டூருக்கு சென்றார்.
அங்கு சென்ற பின்னர் அவரது நண்பர் செல்வம் என்பவர், போலீஸ் ஜீப்பை ஓட்டிப் பார்க்கட்டுமா என்றுகூறியுள்ளார். அதற்கென்ன நானே ஓட்டக் கற்றுத் தருகிறேன் என்று கூறிய பிரைட், செல்வத்திடம் ஜீப்பைக்கொடுத்து விட்டு அவருக்கு அருகில் அமர்ந்து கொண்டார்.
ஆள் நடமாட்டம் இல்லாத சாலையில் ஓட்ட ஆரம்பித்த செல்வம், மெதுவாக முக்கிய சாலைக்கு வந்துள்ளார்.அப்போது ஜீப் திடீரென்று அவரது கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடத் தொடங்கியது. இதில் சாலையோரம்சென்று கொண்டிருந்த ஜெயப்பிரகாஷ், அவரது மைத்துனி ஹேமலதா, உறவுக்கார சிறுவன் நவீன் ராஜ் (வயது 6),விஜயலட்சுமி ஆகியோர் காயமடைந்தனர்.
அனைவரும் கோயம்பேட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு நவீன் ராஜ்சிகிச்சை பலனளிக்காமல் இறந்தான். மற்றவர்களுக்கு ஆபத்தில்லை என்று டாக்டர்கள் கூறியுள்ளனர்.
சம்பவம் பற்றிக் கேள்விப்பட்டதும், பிரைட் ஐசக் சாமிநாதனை போலீஸ் நிலையத்தில் சரணடையும்படி ஐ.ஜி.ஷியாம் சுந்தர் உத்தரவிட்டார். இதையடுத்து காவல் நிலையத்தில் சரணடைந்தார் பிரைட். தலைமறைவாகி விட்டஅவரது நண்பர் செல்வத்தை போலீஸார் தேடி வருகின்றனர்.
-
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு











Click it and Unblock the Notifications