ஆகஸ்டில் காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு
டெல்லி & சென்னை:
காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு அடுத்த ஆண்டு ஆகஸ்டு மாதம் வெளியாகும் என்று மத்திய நீர்வளத் துறைஅமைச்சர் அர்ஜூன் சரன்சேத்தி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டிற்கும் கர்நாடகத்திற்கும் இடையேயான காவரி நதிநீர்ப் பிரச்சனையைத் தீர்க்க கடந்த 1990ம் ஆண்டுமத்திய அரசு நடுவர் மன்றத்தை அமைத்தது. இடைக்கால நிவாரணமாக 205 டி.எம்.சி தண்ணீரை தமிழ்நாட்டிற்குவழங்கும்படி கர்நாடகாவுக்கு நடுவர் மன்றம் உத்தரவு பிறப்பித்தது.
ஆனால், மாநிலத்தில் வறட்சி நிலவுவதாகக் கூறி கர்நாடகம் அதற்கு மறுத்துவிட்டது. இந் நிலையில்நாடாளுமன்றத்தின் கேள்வி நேரத்தின்போது இது குறித்து அதிமுக உறுப்பினர் மலைச்சாமி கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதிலளித்த நீர்வளத் துறை அமைச்சர் அர்ஜூன் சரன்சேத்தி, நடுவர் மன்ற விசாரணைக்காக போதியஅவகாசம் எடுத்துக் கொண்டுள்ளது. 5 ஆண்டு கால அவகாசம் 7 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டது. வரும் ஆகஸ்டுமாதம் இறுதித் தீர்ப்பு வெளியாகும் என்றார்.
மேட்டூர் அணை நீர் திறப்பு அளவு அதிகரிப்பு:
மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு விநாடிக்கு 12,000 ஆகஅதிகரிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
காவிரி டெல்டா பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள சம்பா பயிர்கள் போதிய தண்ணீரின்றி வாடி வருகின்றன.இதனால் மேட்டூர் அணையைத் திறக்கக் கோரி விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து விநாடிக்கு5,000 கன அடிநீர் என்ற விகிதத்தில் மேட்டூர் அணையைத் திறக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.
ஆனால் இந்த நீர் கடைமடை பகுதிகளை வந்தடைவதற்குள் பயிர்கள் அனைத்தும் கருகிப் போய் விடும் என்று கூறிநாகை, திருவாரூர் பகுதி விவசாயிகள் மீண்டும் போராட்டம் நடத்தினர். நேற்று தஞ்சை மாவட்ட ஆட்சித் தலைவர்அலுவலகத்தை முற்றுகையிட்டு நூற்றுக்கணக்கான விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
இந் நிலையில் இன்று காலை முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட ஒரு அறிக்கையில், விவசாயிகளின்கோரிக்கையை ஏற்று மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு விநாடிக்கு 12,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த நீர் 13 நாட்களுக்கு திறந்து விடப்படும். விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துமாறுகோரியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications