வைகோ விஷயத்தில் தமிழக அரசின் வாதத்தை ஏற்றது பொடா மறு ஆய்வு குழு
சென்னை:
பொடா மறுஆய்வுக் குழுவின் அதிகாரம் குறித்து தமிழக அரசு ஆட்சேபணை எழுப்ப எந்தவித முகாந்திரமும்இல்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
பொடா மறுஆய்வுக் குழுவிற்கு, நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும் வழக்கில் தலையிட அதிகாரம் இல்லைஎன்று தமிழக அரசு பூர்வாங்க ஆட்சேபணை தெரிவித்திருந்தது. இதற்குப் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்குமறுஆய்வுக் குழு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
திங்கள்கிழமை(நேற்று) இந்த விசாரணை நடைபெறும் என்று நீதிபதி சகாரியா தலைமையிலான பொடாமறுஆய்வுக் குழு அறிவித்திருந்தது. நீதிபதி சகாரியா மும்பையிலிருந்து வந்த விமானம் தாமதமாக வந்தததால்மாலை 4 மணிக்குப் பின்னர் விசாரணை தொடங்கியது.
வைகோவின் சார்பில் மதிமுக அவைத் தலைவர் கணேசன், தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர் வைத்தியநாதன்,மத்திய அரசு சார்பில் வழக்கறிஞர் பட் மற்றும் நக்கீரன் கோபால் சார்பில் வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆகியோர்ஆஜராகினர்.
மத்திய அரசு தனது பதில் மனுவில், மத்திய பொடா மறுஆய்வுக் குழுவிற்கு பொடா சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டவர்களின் வழக்குகளை விசாரிக்க அதிகாரம் கிடையாது என்று கூற தமிழக அரசுக்கு எந்தவிதமுகாந்திரமும் கிடையாது. மேலும் இக் குழு கேட்டிருந்த ஆவணங்களை சமர்ப்பிக்க தமிழக அரசுகடமைப்பட்டுள்ளது என்று கூறப்பட்டது.
இதை மறுத்த தமிழக அரசு வழக்கறிஞர் வைத்தியநாதன் தனது வாதத்தில், பொடா சட்டத் திருத்தத்திற்கு இன்னும்குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்காதததால், அதுவரை இந்த வழக்கு விசாரணையை ஒத்தி வைக்கவேண்டும்என்றார்.
இதற்கு பட், இந்த சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தாரா, இல்லையா என்பது இந்த வழக்கிற்குத்தேவையில்லாத விஷயம் என்றார். பின்னர் பேசிய கணேசன், நீண்ட நாட்களாக வைகோ சிறையில் இருப்பதால்,வழக்கு விசாரணையை உடனே எடுத்து தீர்ப்பு கூற வேண்டும் என்று கூறினார்.
கோபாலின் வழக்கறிஞர் சண்முகசுந்தரம், தமிழக அரசின் வாதத்தை ஏற்று வழக்கு விசாரணையைத் தள்ளிவைக்கலாம் என்றார்.
முடிவில், தமிழக அரசின் வாதத்தை ஏற்று, பொடா சட்டத் திருத்தத்திற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல்கிடைக்கும்வரை, வழக்கு விசாரணையை வரும் ஜனவரி 7ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி சகாரியாஉத்தரவிட்டார். இதனால் வைகோவின் விடுதலை மேலும் கால தாமதமாகலாம் என்று தெரிகிறது.
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள்












Click it and Unblock the Notifications