தமிழகத்தில் உயிருக்கு ஆபத்து: இசட் பிரிவு பாதுகாப்பு தொடர டி.ஆர்.பாலு கோரிக்கை
சென்னை:
மத்திய அமைச்சர் பதவியில் இல்லாவிட்டாலும் கூட, தமிழகத்தில் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால்,தொடர்ந்து இசட் பிரிவு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, பிரதமர்வாஜ்பாய்க்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
திமுக உயர்மட்ட செயல் திட்டக் குழு முடிவுப்படி, தங்களது அமைச்சர் பதவிகளை டி.ஆர்.பாலுவும், ராஜாவும்சமீபத்தில் ராஜினாமா செய்தனர். இந் நிலையில் பிரமதர் வாஜ்பாய்க்கு டி.ஆர்.பாலு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், கடந்த 2001ம் ஆண்டு என் மீது அதிமுகவினர் தாக்குதல் நடத்தினர். இதைத் தொடர்ந்து இசட் பிரிவுபாதுகாப்பு கொடுக்கப்பட்டது. தற்போது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையிலும், எனதுஉயிருக்கு தொடர்ந்து ஆபத்தும், அச்சுறுத்தலும் இருந்து வருகிறது.
தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பில் உள்ளவர்கள் என் மீது தனிப்பட்ட முறையில் பகைமையுடனும், பழி வாங்கும்உணர்வுடனும் உள்ளதால் எனது இசட் பிரிவு பாதுகாப்பை தொடர அனுமதிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றுஅவர் கூறியுள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி கைது செய்யப்பட்டபோது, முரசொலி மாறனும், டி.ஆர்.பாலுவும் சென்னைகாவல்துறையினரால் குண்டுக்கட்டாக தூக்கிச் செல்லப்பட்டு கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பதவியில் இருந்தபோதே கைது நடவடிக்கையில் இறங்கிய அதிமுக அரசு, தற்போது பதவியில் இல்லாத நிலையில்என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற சூழல் நிலவுவதால், இசட் பிரிவு பாதுகாப்பு தொடர வேண்டும் என்றுடி.ஆர்.பாலு கடிதம் எழுதியிருப்பதாகக் கூறப்படுகிறது.
-
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications