இன்று தனுஷ்கோடி அழிந்த நாள்!
சென்னை:
39 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில்தான் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்திற்கு அடுத்துள்ளதனுஷ்கோடி, புயலால் தாக்கப்பட்டு உருக்குலைந்து போனது.
அது 1964ம் ஆண்டு. டிசம்பர் மாதம் 22ம் தேதி நள்ளிரவிலிருந்தே ராமேஸ்வரத்தையும், தனுஷ்கோடியையும்புயல் தாக்கத் தொடங்கியது. மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய பலத்த புயல் காற்றால் ராமேஸ்வரம்,தனுஷ்கோடியும் படாதபாடு பட்டன.
ராமேஸ்வரத்தை விட தனுஷ்கோடிதான் அதிகம் பாதிக்கப்பட்டது. குறிப்பாக தனுஷ்கோடி துறைமுகமும், நகரும்,20 அடிக்கும் மேலாக எழுந்த கடல் அலைகளால் விழுங்கப்பட்டன. கடல் நீர் நகருக்குள் புகுந்து அங்கிருந்தஉயிர்களையும், கட்டடங்களையும் அழித்தொழித்தது.
வீடுகள், அரசு அலுவலகங்கள்,ரயில் நிலையம், துறைமுக அலுவலகம் என அனைத்துமே காணாமல் போயின.நகரின் ஒரு கிலோமீட்டர் தொலைவிலான பகுதி சில மணி நேரங்களில் கடல் அலைகளுக்கு இரையாகி விட்டது.நூற்றுகணக்கான உயிர்களும் பலியாயின.
பாம்பனிலிருந்து வந்த ரயில் தனுஷ்கோடி ரயில் நிலையத்தை நெருங்கிக் கொண்டிருந்தது.ஆனால் புயலின் கோரப்பசிக்கு ரயிலும் கடலுக்குள் இழுக்கப்பட்டு ஏராளாமான பயணிகள் பரிதாபமாக இறந்தனர்.
புயல் ஓய்ந்து முடிந்தபோது தனுஷ்கோடி அங்கு இல்லை. மாறாக, தபால் நிலையம், ரயில் நிலையம், கிறிஸ்தவபேராலயம் ஆகியவற்றின் சில மிச்சங்கள் மட்டுமே அங்கு காணப்பட்டன.
தனுஷ்கோடியை விட்டு பின்னர் மக்கள் ராமேஸ்வரத்திற்கும், பாம்பனுக்கும் குடி பெயர்ந்து போய் விட்டனர்.ஆனால் இன்னும் கூட சிலர் தொடர்ந்து தனுஷ்கோடியிலேயே வசிக்கிறார்கள்- புயல் தாக்கிய சோகநினைவுகளோடு.
-
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு












Click it and Unblock the Notifications