நாடாளுமன்றத்தில் பெரியார் சிலை நிறுவ அனுமதி
டெல்லி:
நாடாளுமன்ற வளாகத்தில் பெரியார் சிலை அமைக்க இணைக்குழு அனுமதியளித்துள்ளது.
தந்தை பெரியாரின் 125வது பிறந்த ஆண்டை முன்னிட்டு, நாடாளுமன்ற வளாகத்தில் பெரியாரின் சிலையைவைக்க அனுமதி கோரி, மதுரை தொகுதி மக்களவை உறுப்பினர் மோகன் கடிதம் எழுதியருந்தார்.
அதற்கு தேசியத் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் உருவப் படங்கள் மற்றும் சிலைகள்நிறுவுவதற்கான இணைக்குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. இது தொடர்பாக மக்களவைச் செயலகம் மோகனுக்குகடிதம் எழுதியுள்ளது. அக் கடிதத்தில் சிலையை அளிக்க தமிழக அரசு சம்மதம் தெரிவித்துள்ளதாகவும்குறிப்பிடப்பட்டுள்ளது.
சிலை எந்த இடத்தில், எப்போது அமைக்கப்படும் என்பது பின்னர் அறிவிக்கப்படும் என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.
மறைந்த வாழப்பாடி ராமமூர்த்திதான் முதலில் இது குறித்து மத்திய அரசுக்கு 1999ம் ஆண்டு கடிதம்எழுதியிருந்தார். அதனையடுத்து இணைக்குழு தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியது. பின்னர் பெரியார் சிலையைதமிழக அரசு நன்கொடையாக வழங்க முன்வந்தது.
இந் நிலையில், தந்தை பெரியாரின் 125வது பிறந்த நாளையொட்டி மும்பை தாராவியில் பெரியார் சிலைஅமைக்க மும்பை நகர திமுக முடிவு செய்துள்ளது.
பெரியார் நினைவு தினம்: தலைவர்கள் அஞ்சலி
பெரியாரின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. தலைவர்கள் பலரும் பெரியாரின் சிலைக்கு மாலைஅணிவித்து மரியாதை செலுத்தனர். இந் நிலையில் சென்னை அருகே பொன்னேரியில் திமுக சார்பில் முன்னாள்அமைச்சர் சுந்தரம் சார்பில் பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மாலை அணிவித்து விட்டு கீழே இறங்கும்போது, சுந்தரம் கால் தடுமாறி கீழே விழுந்தார். அவரைப் பிடிக்க முயன்றமீஞ்சூர் ஒன்றிய செயலாளர் பாஸ்கர் சுந்தரமும் கீழே விழுந்தார். இதில் சுந்தரத்தின் காலில் எழும்பு முறிவுஏற்பட்டது. இருவரும் பொன்னேரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சிகிச்சைக்குப் பின்னர் இருவரும்வீடு திரும்பினர்.
-
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
விஜய் கையில் எடுக்கப்போகும் 2 மெகா திட்டங்கள்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் அப்டேட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications