கருணாநிதி மீதான டெஸ்மா வழக்கு 30ம் தேதிக்கு ஒத்திவைப்பு
சென்னை:
அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தத்தைத் தூண்டி விட்டதாக கூறி திமுக தலைவர் கருணாநிதி மீது தொடரப்பட்டவழக்கின் விசாரணை வருகிற 30ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
கடந்த ஜூலை மாதம் நடந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தூண்டிவிட்டதாகக் கூறி திமுக தலைவர் கருணாநிதி, கம்யூனிஸ்ட் தலைவர்கள் நல்லகண்ணு, வரதராஜன், காங்கிரஸ்முன்னாள் செயல் தலைவர் இளங்கோவன் உள்ளிட்டோர் மீது எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் தமிழக அரசுடெஸ்மா சட்டத்தின் கீழ் வழக்குத் தொடர்ந்தது.
இந்த வழக்கில் நேரில் ஆஜராவதிலிருந்து தனக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரி கருணாநிதி சார்பில்மனு செய்யப்பட்டிருந்தது. இந்த மனு தொடர்பாக இன்றைக்குள் பதில் அளிக்குமாறு அரசுத் தரப்புவழக்கறிஞருக்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி இன்று நீதிமன்றம் கூடியபோது, நீதிபதி விடுமுறையில் சென்றிருந்ததால், 2-வது குற்றவியல் நீதிபதிராஜசேகர் விசாரணை நடத்தினார். அப்போது அரசுத் தரப்பு பதிலை அளிக்க கூடுதல் அவகாசம் கேட்டு அரசுவழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து வருகிற 30ம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு கூறி வழக்கைநீதிபதி ஒத்திவைத்தார்.
-
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications