இது கலி காலம்: கழிப்பறையில் வீசப்பட்டது சிசு: தாய்க்கு வயது 15!!!
சேலம்:
சேலம் அருகே கிச்சிப்பாளையம் என்ற இடத்தில் பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் சிசு கழிப்பறையில் வீசப்பட்டது. அந்தக் குழந்தையின் தாய்க்கு வயது 15 தான் ஆகிறது என்ற தகவல் போலீஸாரையும் அப் பகுதியினரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
கிச்சிலிப்பாளையம் பகுதியில் உள்ள பொதுக் கழிப்பிடத்தில் குழந்தையின் அழுகுரல் கேட்டதும் அப்பகுதியில் உள்ளவர்கள் சென்று பார்த்தபோது, அங்கு அழகான ஆண் சிசு கிடப்பதைப் பார்த்த அதிர்ந்தனர்.
தொப்புள் கொடி கூட அறுக்கப்படாமல், பிறந்து சில மணி நேரங்களே ஆகியிருந்ததால், உடலெங்கும் ரத்தமும் ஈரமுமாய் அந்த சிசு பரிதாபமாய் கதறிக் கொண்டிருந்தது.
உடனடியாக போலீஸாருக்குத் தகவல் போனது. அவர்கள் விரைந்து வந்து குழந்தையை மீட்டு அரசு மருத்துவமனையில் ஒப்படைத்தனர்.
குழந்தை குறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது 15 வயதான சிறுமி பிடிபடடாள். அச் சிறுமி தான் குழந்தையின் தாய் என்ற அதிர்ச்சியூட்டும் தகவல் கிடைத்தபோது அப் பகுதியினர் மட்டுமின்றி போலீசாரும் அதிர்ந்து போய்விட்டனர்.
தவறான முறையில் குழந்தை உருவானதால் அதை கழிப்பறையில் வீசி விட்டதாக அச் சிறுமி அழுது கொண்டே கூற அவளைத் திட்டுவதா, தேற்றுவதா என்று தெரியாமல் போலீசார் கலங்கி நின்றனர்.
பின்னர்அந்த 15 வயது தாயை போலீஸார் கைது செய்தனர்.
-
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications