எங்க கதவும் திறந்தே இருக்கு: பா.ஜ.க
சென்னை:
கூட்டணியை விட்டு விலக வேண்டும் என்று முடிவு எடுத்து விலகிவிட்டு, இப்போது அதற்கான காரணங்களைத்தேடி அலைந்து கொண்டிருக்கிறது திமுக என பா.ஜ.க. மாநிலத் தலைவர் ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டினார்.
சென்னையில் இன்று நிருபர்களிடம் பேசிய அவர்,
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எங்கள் கொள்கையுடன் ஒத்து வருகிற கட்சியோடு (அதிமுக?) கூட்டணிஅமைக்கத் தயாராக இருக்கிறோம். எங்களது கதவுகள் திறந்தே இருக்கின்றன.
வாஜ்பாயை அடுத்த பிரதமராக ஏற்கும் எந்தக் கட்சியும் எங்களுடன் கூட்டணி சேர வரலாம். இதுவரை நாங்கள்அதிமுக, திமுகவுடன் சம தூரத்தில் விலகி இருக்கிறோம். எங்களுடன் கூட்டணி சேர்ந்தவர்களால் தான் தேர்தலில்வெல்ல முடியும். கடந்த இரு தேர்தல்களிலும் அது தான் நடந்தது.
கூட்டணியில் இருந்து விலகிய திமுக சொல்லும் காரணங்கள் சரியானவை அல்ல. விலக வேண்டும் என்று முதலில்முடிவு செய்து விலகினார்கள். அதன் பின்னர் ஒவ்வொரு காரணமாக தேடித் தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள்.
பா.ஜ.க கூட்டணியில் தொடருவது என்ற பா.ம.கவின் முடிவை வரவேற்கிறோம். மதிமுகவும் இதே போன்ற முடிவைஎடுக்க வேண்டும்.
காவிரி விவகாரத்தில் வாஜ்பாயை பா.ம.க. குற்றம் சொல்வது தேவையற்றது. காவிரி ஆணையத்தை அமைக்கமுயற்சி எடுத்தே வாஜ்பாய் தான் என்பதை மறக்கக் கூடாது. பா.ம.கவும் பா.ஜ.கவும் கொள்கைரீதியில் இணைந்துபோகும் கட்சிகள் அல்ல என்றாலும் எங்களுக்கும் இதுவரை நெருடல் ஏதும் இல்லை.
ஆனால், காவிரி விஷயத்தில் டாக்டர் ராமதாசின் குற்றச்சாட்டை மறுக்கிறோம். தமிழகத்தின் அனைத்துக்கட்சிகளும் ஒரே குரலில் பேச வேண்டும். ஆனால் காவிரி தொடர்பாக கட்சிகளுக்கு இடையே பெரும் வேறுபாடுநிலவுகிறது. இது துரதிர்ஷ்டவசமானது.
காவிரி ஆணையத்தை அமைத்த வாஜ்பாயால் தான் தமிழர்களின் உரிமைகள் மீட்கப்பட்டன.
தமிழை செம்மொழியாக அறிவிக்க வேண்டும் என தமிழக பா.ஜ.கவும் வலியுறுத்தியுள்ளது. எனவே, இதில்பா.ஜ.க. மீது பா.ம.க. பழி போடுவதும் சரியல்ல என்றார் ராதாகிருஷ்ணன்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
சென்னையில் வெடிக்கும் பிரியா vs விஜய் மோதல்.. மேயர் - முதல்வர் இடையே மறைமுக யுத்தம்.. என்ன காரணம்? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
திருப்பூர் ரிதன்யா வரதட்சணை மரணம்: பைத்தியக்காரன் போல சுத்துறோம்! விஜய்க்கு ரிதன்யாவின் பெற்றோர் மனு -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications