திமுகவின் கதவுகள் திறந்தே இருக்கின்றன: விரைவில் தமிழகத்தில் புதிய கூட்டணி- கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிட தமிழகத்தில் புதிய கூட்டணி அமைப்பதற்கான வேலைகளைஆரம்பித்துவிட்டதாக திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்தார்.

சென்னையில் இன்று நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

புதிய கூட்டணி அமைக்கும் வேலைகள் ஆரம்பித்துவிட்டன. அது குறித்து விவரங்களை நான் இப்போதே சொல்லமுடியாது. தேர்தலை எப்போது வேண்டுமானாலும் சந்திக்க திமுக தயார்.

இந்த ஆண்டு இறுதியில் நடக்க உள்ள மக்களவைத் தேர்தலை மத்திய அரசு முன் கூட்டியே நடத்த முடிவு செய்தால்அதையும் சந்திக்கத் தயார். மக்களவைக்கு முன் கூட்டியே தேர்தல் வந்தால் வரும் மார்ச் 6ம் தேதி விருதுநகரில்நடக்கும் திமுக தென் மண்டல மாநாட்டிலேயே வேட்பாளர் பட்டியலை வெளியிடுவோம். அதிலேயே தேர்தல்அறிக்கையையும் வெளியிடுவோம் என்றார்.

காங்கிரசுடன் கூட்டணி அமைப்பீர்களா என்று கேட்டதற்கு, எங்களுடன் கூட்டணி சேர எந்தக் கட்சியும் வரலாம்.பேச்சு நடத்த எங்கள் கதவுகள் திறந்தே இருக்கின்றன என்றார் கருணாநிதி.

அதே போல மக்களவைத் தேர்தலில் திமுகவுடன் கூட்டு சேர்ந்து போட்டியிட வேண்டும் என காங்கிரஸ் தலைவர்சோனியா காந்திக்கு, அக் கட்சியின் மூத்த தலைவர் பிரணாப் முகர்ஜி பரிந்துரை செய்து கொடுத்துள்ளது குறித்துக்கேட்டபோது, அது குறித்து எனக்கு ஏதும் தெரியாது.

அதே நேரத்தில் மத்தியில் ஒரு கூட்டணி அரசு (வாஜ்பாய் அரசு) தனது 5 ஆண்டு காலத்தைப் பூர்த்திசெய்யவுள்ளது. இதனால் கூட்டணி ஆட்சி நடத்த காங்கிரஸ் முன் வந்தால் நல்லது என்றார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், எங்களைப் பின்பற்றி பா.ம.கவும் பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வெளியேறும்என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. தமிழக பா.ஜ.க. தலைவர்களால் நாங்கள் தான் அவமானப்படுத்தப்பட்டோம்.மேலும் தே.ஜ.கூ. செயல் திட்டத்தில் இருந்து மத்திய அரசு விலகிச் செல்ல ஆரம்பித்ததால் பாதிக்கப்பட்டதும்திமுகதான். அதனால் நாங்கள் வெளியேற வேண்டிய சூழல் உருவானது.

பா.ஜ.க, பா.ம.க. இடையே அப்படிப்பட்ட மோதல் எதுவும் இல்லை. அதே போல கூட்டணியில் இருந்து விலகவேண்டும் என்று மதிமுகவையும் நாங்கள் கட்டாயப்படுத்த மாட்டோம் என்றார் கருணாநிதி.

கூட்டணியை விட்டு திட்டமிட்டு வெளியேறுவிட்டு இப்போது திமுக காரணங்களைத் தேடிக் கொண்டிருக்கிறது எனபா.ஜ.க. தலைவர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளாரே என்று கேட்டபோது, இரண்டும் ஒன்று தானே. காரணத்தைசொல்லிவிட்டு வெளியேறலாம். அல்லது வெளியே வந்துவிட்டு காரணங்களைக் கூறலாமே.

முன்னதாக தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள்கருணாநிதியைச் சந்தித்துப் பேசினர். அரசால் தங்களுக்குத் தொடர்ந்து தொல்லை தரப்பட்டு வருவதால் திமுகவின்ஆதரவைக் கோரினர்.

அவர்களுக்கு முழு ஆதரவு தருவதாக கருணாநிதி உறுதியளித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+