பொடா: நெடுமாறனின் ஆதரவாளர் பாவாணன் விடுதலை
திருச்சி:
பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தமிழர் தேசிய இயக்கத்தைச் சேர்ந்த புதுக்கோட்டை பாவாணன்சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவையடுத்து இன்று ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாகப் பேசியதாக கடந்த ஆண்டு தமிழர் தேசியஇயக்கத்தைச் சேர்ந்த நெடுமாறன், சுப.வீரபாண்டியன், பாவாணன் உள்ளிட்டோர் கைதாயினர். கடந்த வாரம்இவர்களுக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
527 நாட்கள் சிறையில் வாடிய பாவாணன் இன்று காலை 9.30 மணிக்கு விடுதலையாவார் என்றுதெரிவிக்கப்பட்டதையடுத்து அவரை வரவேற்க அவரது ஆதரவாளர்கள் திருச்சி மத்திய சிறை முன்புகுழுமியிருந்தனர்.
ஆனால், மதியம் 1.00 மணிவரை பாவாணன் விடுவிக்கப்படாததால், அவரது ஆதரவாளர்கள் அரசிற்கு எதிராகக்கோஷம் எழுப்பி, சிறைச்சாலை முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். பின்னர் அவர் 1.30 மணிக்கு விடுதலைசெய்யப்பட்டார். நீதிமன்ற உத்தரவு கிடைக்காததால்தான் அவரை விடுவிக்கத் தாமதமானது என்று சிறைஅதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னதாக மதுரை வந்திருந்த விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திருமாவளவன் மத்திய சிறை சென்றுபாவாணனைச் சந்தித்தார்.
உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியவர்களில், நெடுமாறனுக்கு வேறொரு வழக்கில் ஜாமீன் கிடைக்காததால் அவர்மட்டும் இன்னும் சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வைகோவுடன் தாணு சந்திப்பு:
இதற்கிடையே பொடா வழக்கில் கைதாகி வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள மதிமுக பொதுச் செயாளர்வைகோவை தயாரிப்பாளரும் மதிமுக பிரமுகருமான கலைப்புலி எஸ்.தாணு சந்தித்துப் பேசினார்.
அதே போல கட்சியின் அவைத் தலைவர் எல்.கணேசன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும் வைகோவை சந்தித்தனர்.அப்போது பா.ஜ.க கூட்டணியில் தொடர்வது குறித்து அவர்களுடன் வைகோ ஆலோசித்ததாகத் தெரிகிறது.
-
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விஜய் போட்ட உத்தரவு.. 5 நாள் தான் டைம்.. வீடு கட்டுவோருக்கு மெகா குட்நியூஸ்! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications