சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனர் மரணம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை மற்றும் தமிழகம் முழுவதிலும் பிரபலமான சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தை நிறுவியவரானசெல்வரத்தினம், சென்னையில் திடீர் என்று மரணமடைந்தார்.

சென்னை தி.நகர் ரங்கநாதன் தெருவில் உள்ளது சரவணா ஸ்டோர்ஸ். சென்னை மக்கள் மட்டுமின்றி தமிழகமக்கள் அனைவரின் மனதிலும் குறுகிய காலத்தில் இடம் பிடித்த வர்த்தக நிறுவனம். சென்னைக்கு வரும் யாரும்சரவணா ஸ்டோர்ஸ் போகாமல் ஊர் திரும்ப மாட்டார்கள் என்ற அளவுக்கு மக்களின் மனதைக் கவர்ந்த கடையாகஇது திகழ்ந்து வருகிறது.

சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தை உருவாக்கியவர் செல்வரத்தினம். இவரும் சகோதரர்கள் ராஜரத்தினம்,யோகரத்தினம் ஆகியோர் இணைந்து இந்த நிறுவனத்தை நடத்தி வந்தனர்.

சமீப காலமாக சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் மீது பல்வேறு புகார்கள் வந்தன. அங்கு வரும்வாடிக்கையாளர்களுக்கு மரியாதை கொடுக்கப்படுவதில்லை, தாக்கப்படுகிறார்கள், பெண்களும்தாக்கப்படுகிறர்கள் என்று புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.

உச்சகட்டமாக சில மாதங்களுக்கு முன்பு ஒரு வாடிக்கையாளர் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் 3-வதுமாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சூழ்நலையில் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனஅதிபர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது.

சரவணா ஸ்டோர்ஸ் நிர்வாகத்தை செல்வரத்தினத்திடமிருந்து அவரது சகோதரர்கள் ராஜரத்தினம், யோகரத்தினம்எடுத்துக் கொண்டனர். ரங்கநாதன் தெருவில் இருந்த சரவணா செல்வரத்தினம் நகைக் கடை, இனிப்புக் கடைமற்றும் பாஸ்ட் புட் கடை ஆகியவை செல்வரத்தினத்திற்குக் கொடுக்கப்பட்டது.

மிகப் பெரிய சாம்ராஜ்யமான சரவணா ஸ்டோர்ஸ் போன பின்னர் செல்வரத்தினம் மிகுந்த மனக்கவலைக்குள்ளானார். பிஸினஸூம் சரியில்லை. இந் நிலையில் அவர் மரணமடைந்து விட்டதாக குடும்பத்தினர்தெரிவித்துள்ளனர். ஏற்கனவே இதயநோய் காரணமாக அறுவைச் சிகிச்சை செய்திருந்தார் செல்வரத்தினம்.

செல்வரத்தினத்திற்கு பிரேமா என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+