30 பேரிடம் ரூ. 24 லட்சம் சுருட்டிய தம்பதி தலைமறைவு!
சென்னை:
சீட்டுப் பிடிப்பதாகக் கூறி 30 பேரிடம் ரூ. 24 லட்சம் வரை சுருட்டிய கணவனும், மனைவியும் தங்களது வீட்டைவிற்று விட்டு தலைமறைவாகி விட்டனர்.
சென்னை திருவான்மியூர் மருதீஸ்வரர் நகர் பகுதியில் வசித்து வந்தவர் அய்யனார். இவரது மனைவி சந்திரா. ஆறுஆண்டுகளுக்கு முன்பு இப் பகுதிக்கு வந்த இருவரும் அங்கேயே வீடு வாங்கிக் குடியேறினர்.
அய்யனார் மளிகைக் கடை வைத்தார். அவரும், அவரது மனைவியும் அப் பகுதியில் உள்ள பெண்களின்நம்பிக்கையைப் பெறும் வகையில் நடந்து கொண்டனர். பின்னர் சீட்டுப் பிடிக்கப் போவதாகக் கூறி அவர்களிடம்பணம் வசூல் செய்யத் தொடங்கினர்.
இப்படியாக ஒவ்வொருவரிடம் தலா ரூ. 30,000 முதல் ரூ. 2 லட்சம் வரை வசூல் செய்துள்ளதாகத் தெரிகிறது.கிட்டத்தட்ட 24 மாதம் வரை பணத்தை வசூல் செய்துள்ளனர்.
இந் நிலையில் 2 மாதங்களுக்கு முன்பு அய்யனாரும் அவரது மனைவியும் திடீரென்று தலைமறைவாகி விட்டனர்.அவர்கள் எங்கு சென்றார்கள் என்று தெரியவில்லை. இந்தச் சூழ்நிலையில் அய்யனாரின் வீட்டை வேறு ஒருவர்விலைக்கு வாங்கி விட்டதாகத் தகவல் வெளியானபோதுதான், தாங்கள் ஏமாற்றப்பட்டதை அப் பகுதி மக்கள்உணர்ந்தனர்.
இது குறித்து எழும்பூரில் உள்ள மாநகர காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் ஏமாற்றப்பட்ட பெண்களும்,ஆண்களும் புகார் கொடுத்தனர். இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு விசாரணை நடத்தினர்.
பெரம்பூல் உள்ள அய்யனான் மாமனார் வீட்டில் போலீஸார் விசாரணை செய்தபோது, பாண்டிச்சே, கடலூர் ஆகியஊர்களிலும் இதேபோல, இருவரும் மோசடி செய்ததும், அதன் பிறகு அவர்களை குடும்பத்தை விட்டு விலக்கிவைத்து விட்டதாகவும் அய்யனான் மாமனார் தெவித்தார்.
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications