ஈரான் பூகம்பம்: 25,000 பேர் பலி, 10,000 உடல்கள் மீட்பு
தெஹ்ரான்:
தென்கிழக்கு ஈரானில் பாம் நகரில் நேற்று ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் குறைந்த பட்சம் 25,000 பேராவதுஇறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதுவரை 10,000 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
அதே நேரத்தில் ஈரான் தொலைக்காட்சி 20,000 பேர் இறந்திருக்கலாம் என்று தெரிவித்துள்ளது. மேலும்மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களில் 350 பேர் இறந்துள்ளனர் என்றும், பாம் நகரைச் சுற்றியுள்ள,பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு எந்த ஒரு மீட்புக் குழுவும் இதுவரை செல்லவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
இந் நிலையில் இடிபாடுகளுக்கிடையே சிக்கி, உயிருடன் இருப்பவர்களைக் கண்டறிய 12 மோப்ப நாய்கள் பாம்நகருக்கு அனுப்பப்பட்டுள்ளன. கெர்மன் நகரை வந்தடைந்த சுவிஸர்லாந்து நாட்டு மீட்புக் குழுவினரும் பாம்நகருக்கு விரைந்துள்ளனர். அந்தக் குழுவில் மோப்ப நாய்களும் இருக்கின்றன.
இதற்கிடையே மீட்புக் குழு அதிகாரிகளுள் ஒருவரான முகம்மது ஜஹான்ஷகி என்பவர், சடலங்களைக் கட்டிஅனுப்புவதற்கு பைகள் தேவைப்படுகின்றன. ஆயிரக்கணக்கில் சடலங்கள் இடிபாடுகளுக்கிடையில் உள்ளதால்,அதே எண்ணிக்கையில் பைகளும் உடனடியாகத் தேவை என்று கூறியுள்ளார்.
இந் நிலையில், உலக நாடுகளின் உதவியை ஈரான் அதிபர் கடாமி கோரியுள்ளார். இஸ்ரேல் தவிர, மற்ற நாடுகள்வழங்கும் உதவியை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். பிரிட்டிஷ், ரஷ்யா மற்றும்ஜெர்மனி நாடுகள் தங்கள் மீட்புப் படையை அனுப்பி வைத்துள்ளன.
-
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications