மலேசியாவிலிருந்து மீண்ட 3 தமிழக இளைஞர்களுக்கு மதுக் கடையில் வேலை: ஜெ உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

Jayalalithaa with youths cheated in Malaysia

மலேசியாவில் இருந்து சென்னை திரும்பி முதல்வரைச் சந்தித்த இளைஞர்கள்
மலேசியாவுக்கு வேலை தேடிச் சென்று அங்கு பாஸ்போர்ட், விசா ஆகியவற்றை மலேசிய அதிகாரிகளிடம்பறிகொடுத்து விட்டு பரிதவித்த 3 தமிழ் இளைஞர்கள் அங்கிருந்து மீட்கப்பட்டு சென்னை வந்தனர்.

அவர்களுக்குஅரசு மதுக் கடையில் வேலை போட்டுத் தருமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த 10 இளைஞர்கள் மற்றும் ஆந்திராவைச் சேர்ந்த 6 இளைஞர்கள் ஆகிய 16 பேர்சென்னையிலிருந்து வேலை வாய்ப்பு நிறுவனம் ஒன்றின் மூலம் மலேசியாவுக்கு வேலைக்கு அனுப்பப்பட்டனர்.

முறையான விசா, பாஸ்போர்ட்டுடன் அங்கு சென்ற அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. உறுதியளிக்கப்பட்டவேலை தரப்படவில்லை. நீண்ட போராட்டத்துக்குப் பின் கூலி வேலைகள் தரப்பட்டன. ஆனால், சம்பளம்கொடுக்கவில்லை.

இதை எதிர்த்துக் கேட்ட அந்த வாலிபர்கள் மீது மலேசிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். அவர்களதுபாஸ்போர்ட் மற்றும் விசாவை பறித்து வைத்துக் கொண்டனர்.

இதனால் பரிதவித்த 16 பேரும் ஒரு கோவில் தஞ்சம் புகுந்தனர்.

பின்னர் இந்திய தூதரகத்தின் உதவியை நாடியபோது சரியான முறையில் அவர்களுக்கு உதவி கிடைக்கவில்லை.இதைத் தொடர்ந்து தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு 16 பேரும் கடிதம் எழுதி தங்களைக் காப்பாற்றுமாறுகோரினர்.

இதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஜெயலலிதா 2 முறை கடிதம் எழுதினார்.இதன் பின்னர் தான் மலேசியாவில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகளுக்கு அறிவு வந்தது.

16 பேரையும் பத்திரமாக மீட்டு இந்தியாவுக்கு கொண்டு வர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந் நிலையில், மத்திய அரசின் நடவடிக்கையின் எதிரொலியாக முரளிதரன், கோபிநாத், சுந்தரராஜன் ஆகிய 3தமிழ் இளைஞர்களும் மலேசியாவிலிருந்து மீட்கப்பட்டு சென்னை திரும்பினர்.

மூன்று பேரும் ஜெயலலிதாவை சந்திக்க விருப்பம் தெரிவித்தனர். இதையடுத்து அவர்களை அதிகாரிகள்கோட்டைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு ஜெயலலிதாவைச் சந்தித்து தங்களது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர். மூவரும் உணர்ச்சி மிகுதியால்அழுது, ஜெயலலிதாவின் காலில் விழுந்தனர்.

இதையடுத்து அவர்களைத் தேற்றிய ஜெயலலிதா, வேலை தேடி வெளிநாடு சென்ற உங்களை தமிழக அரசின்மதுக் கடையில் உங்களது தகுதிக்கேற்ற வேலையில் அமர்த்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

உங்களுக்கு விருப்பமா என்று கேட்க, மூவரும் உடனே பணியில் சேருவதாக தெரிவித்தனர். மேலும்ஜெயலலிதாவுக்கு நன்றியும் தெரிவித்துக் கொண்டனர்.

அவர்களுக்கு டாஸ்மாக் நிறுவனம் நடத்தும் மதுக் கடைகளில் தகுதிக்கேற்றவாறு விற்பனையாளர் மற்றும்மேற்பார்வையாளர் பணி வழங்கப்படும் எனத் தெரிகிறது.

மாத வருவாய் ரூ. 1,500 முதல் 3,000 வரையிலும், ஊக்கத் தொகையையும் அவர்கள் பெறுவார்கள்.

மலேசியாவில் உள்ள மேலும் 13 பேரை மீட்டு வருவதற்கான நடவடிக்கைகள் நடந்து வருவதாகவும், விரைவில்அவர்களும் சென்னை வந்து விடுவார்கள் என்று 3 பேரும் பின்னர் செய்தியாளர்களிடம் தெவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+