முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவின் பாதுகாப்பு படை வாபஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது. மாநிலபோலீஸ் பாதுகாப்பும் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

திமுகவின் உயர் மட்ட செயல் திட்டக் குழு தீர்மானப்படி மத்திய அமைச்சர்களாக இருந்த டி.ஆர்.பாலு மற்றும் ராஜாஆகியோர் சமீபத்தில் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.

இதைத் தொடர்ந்து பிரதமர் வாஜ்பாய்க்கு பாலு எழுதிய கடிதத்தில், தனது உயிருக்கு தமிழகத்தில் அச்சுறுத்தல்உள்ளது. தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பில் உள்ளவர்கள் தனக்கு எதிராக தனிப்பட்ட பகைமை உணர்வுடன்செயல்பட்டு வருகிறார்கள். எனவே தனக்கு வழங்கப்பட்டு வரும் உயர் மட்ட பாதுகாப்பை தொடர்ந்து வழங்கவேண்டும் என்று கோரியிருந்தார்.

இந் நிலையில் நேற்று காலை முதல் டி.ஆர்.பாலுவுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டு விட்டது.அவரது வீட்டில் பாதுகாப்புக்கு இருந்த இசட் பிரிவு பாதுகாப்பு அதிகாரிகள் திரும்ப அழைத்துக் கொள்ளப்பட்டுவிட்டனர்.

அதேபோல, பாலுவின் வீட்டிலும் அவருடன் காரில் பின்தொடர்ந்து செல்லும் மாநில போலீஸாரும் வாபஸ்பெறப்பட்டு விட்டனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+