செங்கை கோர்ட்டில் நாளை நெடுமாறன் ஜாமீன் மனு தாக்கல்
சென்னை:
பூந்தமல்லி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் மறுக்கப்பட்டுள்ள நிலையில் செங்கல்பட்டு அமர்வு (செஷன்ஸ்)நீதிமன்றத்தில் பழ. நெடுமாறன் சார்பில் நாளை மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்படவுள்ளது.
விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கிய தளபதியாக விளங்கிய கிட்டு குறித்து காவியத் தலைவன் கிட்டு என்றபெயரில் புத்தகம் எழுதியதற்காக தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் மீது ஆலந்தூர் சார்புநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு விசாரணையில் உள்ளது.
இதில் ஜாமீன் கோ நெடுமாறன் மனுத் தாக்கல் செய்தார். மனு மீதான விசாரணை முடிவடைந்து தீர்ப்புவழங்கப்படவிருந்த நிலையில், நீதிபதி மாற்றப்பட்டு விட்டார். இதைத் தொடர்ந்து பூந்தமல்லி கூடுதல் அமர்வுநீதிமன்றத்தில் நெடுமாறன் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அங்கு அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டு விட்டது.
இதைத் தொடர்ந்து நாளை செங்கல்பட்டு மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நெடுமாறன் சார்பில் மேல் முறையீட்டுமனு தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த வழக்கில் ஜாமீன் கிடைத்தால் நெடுமாறன் உடனடியாக 16 மாதசிறைவாசம் முடிந்து விடுதலை ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications