தூத்துக்குடி கலெக்டரிடம் தஞ்சமடைந்த யாழ்ப்பாணம் மீனவர்
தூத்துக்குடி:
இலங்கையைச் சேர்ந்த வாய் பேச முடியாத மீனவர் தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளார். தன்னை அகதியாக சேர்த்துக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் புகலிடம் அடைந்துள்ளார்.
வெள்ளிக்கிழமை தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு ஒருவர் வந்தார். வந்தவர் வெள்ளைத்தாள் ஒன்றில் ஆங்கிலத்தில் தன்னைப் பற்றி எழுதிக் காட்டினார்.
அதன்படி, அவரது பெயர் டேனியல். வயது 21, வாய் பேச முடியாதவர். இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டத்தில்உள்ள யானை இறவு பகுதியைச் சேர்ந்த டெமோஸ் என்பவரின் மகன். மீனவரான டேனியல், பாக்பாய் என்றகப்பலில் பணியாற்றி வந்தார்.
இலங்கையிலிருந்து தூத்துக்குடிக்கு கப்பல் வந்தபோது அதில் டேனியலும் பயணம் செய்தார். தூத்துக்குடிதுறைகத்தில் கப்பல் நிறுத்தப்பட்டிருந்தபோது, நகரைச் சுற்றிப் பார்க்க கிளம்பினார். திரும்பி வந்து பார்த்தபோது,கப்பல் புறப்பட்டுப் போய் விட்டது.
கையில் வைத்திருந்த பணத்தை வைத்து 2 நாட்களை தள்ளியுள்ளார். இந் நிலையில் அவரது பாஸ்போர்ட்டும் திருடுபோய் விட்டது. தன்னை அகதியாகக் கருதி அடைக்கலம் தருமாறு எழுதிக் காட்டினார் டேனியல்.
அவரை தூத்துக்குடி தெற்கு காவல் நிலையத்தில் ஒப்படைக்குமாறு அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர்ராஜாராமன் உத்தரவிட்டார்.
-
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications