சென்னை ரயிலில் வாத்துக் குஞ்சுகள் ஏற்படுத்திய பரபரப்பு!
சென்னை:
சென்னை சென்டிரல் ரயில் நிலையத்திற்கு வந்த ரயிலில் இருந்த மர்ம பெட்டியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.கடைசியில் அந்தப் பெட்டியில் வாத்துக் குஞ்சுகள் இருந்தது தெரியவந்தது.
திருவனந்தபுரத்திலிருந்து சென்னைக்கு வரும் சென்னை மெயில் ரயில் சனிக்கிழமை சென்டிரல் ரயில் நிலையத்திற்குவந்தது. ரயிலிலிருந்து பயணிகள் இறங்கிச் சென்றதும், ரயில் நிலைய ஊழியர்கள் பெட்டி பெட்டியாக ஏறிசோதனை செய்தனர்.
அப்போது ஒரு பெட்டியின் இருக்கைக்கு கீழே ஒரு பெட்டி இருந்ததைப் பார்த்தனர். அட்டைப் பெட்டியாகஇருந்ததால் அவர்களுக்கு சந்தேகம் வந்தது. ஒருவேளை வெடிகுண்டு வைக்கப்பட்டிருக்கலாம் என்று பயந்தஅவர்கள் உடனடியாக ரயில்வே போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.
இதைத் தொடர்ந்து ரயில் நிலையம் உஷார்படுத்தப்பட்டது. வெடிகுண்டுகளை கண்டுபிடிக்கும் நிபுணர்களுக்குதகவல் தரப்பட்டு அவர்கள் விரைந்து வந்தனர். பின்னர் மிகவும் ஜாக்கிரதையாக அந்த பெட்டியை எடுத்துகவனத்துடன் திறந்து பார்த்தபோது அத்தனை பேர் முகத்திலும் அசடு வழிந்தது.
காரணம் குண்டுக்குப் பதில் வாத்துக் குஞ்சுகள் இருந்ததுதான். இந்த வாத்துக் குஞ்சுகளை யாரோ சிலர் கடத்திவந்துள்ளனர். ஆனால் போலீஸார் கண்டுபிடித்து விடுவார்களோ என்று பயந்து அப்படியே விட்டு விட்டுச்சென்றுள்ளனர்.
வாத்துக் குஞ்சுகளை கிண்டியில் உள்ள தேசிய பூங்காவிற்கு போலீஸார் அனுப்பி வைத்தனர்.
-
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்!












Click it and Unblock the Notifications