ஜெ நேர்காணலுக்கு வந்த அதிமுகவினரின் பஸ்கள் மோதல்: 4 தொண்டர்கள் பலி
வேலூர்:
சென்னையில் முதல்வர் ஜெயலலிதா நடத்தும் நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அதிமுகவினர் வந்தபஸ்கள் மோதிக் கொண்டதில் 4 தொண்டர்கள் பலியானார்கள்.
இன்று வேலூர் கிழக்கு மற்றும் வேலூர் மேற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகளை ஜெயலலிதா சந்தித்துப் பேசுகிறார்.இதற்காக இந்த இரு மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கான பஸ்கள், வேன்களில் தொண்டர்களும்நிர்வாகிகளும் சென்னை கிளம்பினர்.
அணைக்கட்டு தொகுதியிலிருந்து 60 அதிமுக நிர்வாகிகள் அடங்கிய பஸ் ஒன்று இன்று அதிகாலை சென்னைபுறப்பட்டது.
அதே போல ஆம்பூர் அதிமுகவினரும் ஒரு பஸ்சில் சென்னை வந்து கொண்டிருந்தனர். பஸ்கள் அனைத்தும்பள்ளிகொண்டாவுக்கு வந்து அங்கிருந்து மொத்தமாகப் புறப்பட்டுச் செல்வது என்று முடிவு செய்யப்பட்டிருந்தது.
இந் நிலையில் இன்று காலை 6.45 மணிக்கு அணைக்கட்டு தொகுதி அதிமுகவினரின் பஸ் பள்ளிகொண்டாசெல்லும் வழியில் வேலூர் கந்தனேரி அருகே சென்றது. அப்போது ஆம்பூர் பஸ் எதிர் திசையில் வந்தது. அதுவும்பள்ளி கொண்டாவுக்கு வேறொரு வழியில் சென்று கொண்டிருந்தது.
இந் நிலையில் இந்த இரு பஸ்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் வெங்கடேசன் (35), யசோதா (45)ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பிச்சாண்டி (39) மற்றும் 50 வயது மதிக்கத்தக்கஇன்னொரு தொண்டர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் இறந்தனர்.
9 பெண்கள் உள்ளிட்ட 52 பேர் பலத்த காயங்களுடன் வேலூர் அரசு மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 7 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
தகவல் அறிந்ததும் வேலூர் மாவட்ட ஆட்சியர் மோகன்தாஸ் மற்றும் டிஐஜி லட்சுமி ஆகியோர் மருத்துவமனைசென்று காயமடைந்தவர்களைச் சந்தித்தனர்.
-
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications