காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறாது: பா.ஜ.க
சென்னை:
மக்களவைத் தேர்தலுக்கு முன் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பிரதமருக்கான வேட்பாளரை அறிவிக்கப்போவதில்லை என்று அக் கட்சியின் தலைவர் சோனியா காந்தி கூறியிருப்பது, அவரது தலைமையை கூட்டணிக்கட்சிகள் ஒத்துக் கொள்ளாது என்பதையே காட்டுவதாக பா.ஜ.க. தலைவர் வெங்கைய்யா நாயுடு கூறியுள்ளார்.
திருவனந்தபுரம் செல்லும் வழியில், சென்னை வந்த வெங்கையா நாயுடு விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம்பேசுகையில்,
காங்கிரஸ் கட்சிக்குத் தலைவர் இல்லை. தலைவர் இல்லாத கட்சியான காங்கிரஸை வழி நடத்திச் செல்லும்சோனியா காந்தி, கூட்டணிக் கட்சிகளுக்கு பிரதமர் பதவியை விட்டுக் கொடுக்கவும் தயார் என்று விரக்தியுடன்கூறியுள்ளார். பிரதமரை மக்கள்தான் தேர்ந்தெடுக்கவேண்டும் என்று மும்பையில் பேசியிருக்கிறார்.
தேர்தல் அறிவிக்கப்படும் முன்பே அவருக்கு தோல்வி குறித்த பயம் வந்துவிட்டதை இது காட்டுகிறது. வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கையை இழந்ததால்தான் கூட்டணிக்குத் தலைவர் யார் என்பதை அறிவிக்க காங்கிரஸ்தயங்குகிறது.
இப்படிப்பட்டி கட்சிக்கு மக்கள் எப்படி ஓட்டுப் போடுவார்கள்?. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர்வாஜ்பாயை முன்னிறுத்தியும், வாஜ்பாய் அரசின் சாதனைகளை விளக்கிக் கூறியும் ஓட்டு கேட்போம்.
காங்கிரஸ் கட்சியின் 45 ஆண்டு கால ஆட்சியின்போது ஊழல், வேலையில்லாத் திண்டாட்டம், வறுமைஆகியவைதான் செழிப்போடு இருந்தன.
தமிழகத்தில் கூட்டணி குறித்து இதரக் கட்சிகளுடன் பேசுவதற்கு இன்னும் காலம் உள்ளது என்றார்.
-
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications