அதிமுகவுடன் கூட்டணிக்கு பா.ஜ.க. முயல்வதால் விலகுகிறாம்: மதிமுக
சென்னை:
அதிமுகவுடன் கூட்டணி சேர பா.ஜ.க. முயன்று வருவதாலேயே தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்துவிலகியதாக மதிமுக கூறியுள்ளது.
மதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்துக்குப் பின் நிருபர்களிடம் பேசிய அக் கட்சியின் அவைத் தலைவர் எல்.கணேசன்,
கூட்டணியில் இருந்து விலகும் முடிவை மதிமுக மறுபரிசீலனை செய்யாது. பா.ஜ.கவுடனான எங்களது உறவுநல்லபடியாகவே இருந்தாலும் அவ்வப்போது மோதலும் இருந்து வந்தது.
ஆனால், மக்கள் விரோத, பாஸிச அதிமுகவுடன் கூட்டணி சேர பா.ஜ.க. முயன்று வருவது தான் எங்களதுவிலகலுக்கு முக்கிய காரணம்.
இந் நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நாங்கள் நீடித்தால் எங்கள் கட்சியின் மீது மக்களுக்குள்ளநம்பிக்கையே சிதைந்து போய்விடும்.
திராவிட இயக்கத்தை கட்டிக் காக்க திமுகவுடன் நாங்கள் இணைந்து பணியாறுவது அவசியம் என்பதையும்உணர்ந்ததால் தான் இந்த முடிவை எடுத்தோம். இப்போது எங்களுக்கும் திமுகவுக்கும் இடையே மிக நல்ல உறவுநிலவுகிறது.
தமிழகத்தில் எங்கள் கூட்டணிக்கு கருணாநிதி தான் தலைவர். எங்களது நலன்களை கருணாநிதி பாதுகாப்பார்.தமிழகத்தைப் பொறுத்தவரை அடுத்த தேர்தல் என்பது கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் இடையிலான போட்டிதான்.
பொடா மறு ஆய்வுக் குழு என்ன முடிவெடுக்கும் என்று எங்களுக்குத் தெரியாது. அதே நேரத்தில் நீதிமன்றம்மூலமே வைகோவை விடுவித்து ஜனவரி இறுதிக்குள் வெளியே கொண்டு வந்துவிடுவோம். பொடா விஷயத்தில்பிரதமர் வாஜ்பாய் ஏதும் செய்ய முடியாத நிலையில் இருக்கிறார். இதனால் தான் வைகோவை இத்தனை காலம்சிறையில் இருக்க வேணடியதாயிற்று.
எக்காரணம் கொண்டும் வைகோ ஜாமீனில் வெளியே வர மாட்டார். அவரை நீதிமன்றம் விடுவிக்கும்.
திமுகவைப் போலவே நாங்களும் பிரச்சனையின் அடிப்படையில் தான் இனி மத்திய அரசுக்கு ஆதரவு தருவோம்என்றார்.
திமுக- காங்கிரஸ் இடையே கூட்டணி வந்தால் அதில் மதிமுகவைச் சேர்க்க காங்கிரஸ் முன் வருமா என்றுகேட்டபோது, யூகத்தின் அடிப்படையிலான கேள்வி இது. இதற்கு நான் பதிலளிக்க விரும்பவில்லை என்றார்.
திமுகவும் மதிமுகவும் இணையுமா என்று கேட்டபோது, இதுவும் யூகமான கேள்வி தான். நாங்களும் திமுகவும்இந்திய கம்யூனிஸ்ட், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் போல செயல்படுவோம் என கருணாநிதி ஏற்கனவேகூறியிருக்கிறார் என்றார்.
பொடா பாய்ந்தாலும் பயமில்லை: கண்ணப்பன்
மத்திய அமைச்சரவையில் இருந்து விலகினால் உங்களை அதிமுக அரசு முன்பே திட்டமிட்டபடி பொடா சட்டத்தின்கீழ் கைது செய்ய வாய்ப்புள்ளதே என்று மத்திய அமைச்சர் கண்ணப்பனிடம் கேட்டபோது,
அது குறித்து எனக்கு பயமில்லை. என்னைக் கைது செய்ய விரும்பினால் தாராளமாய் கைது செய்யலாம். எனக்குஅது குறித்த அச்சமோ, கவலையோ இல்லை என்றார்.
-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications