முடிவு வைகோ கையில்; கூறுகிறார் கண்ணப்பன்!
கோவை:
தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் மத்திய அமைச்சரவையிலிருந்து வெளியேறுவது குறித்த எங்களதுகருத்துக்களை கட்சியின் பொதுச் செயலாளர் வைகோவிடம் தெரிவித்து விட்டோம். இனி முடிவு எடுக்கவேண்டியது அவர்தான் என்று மதிமுக பொருளாளரும், மத்திய அமைச்சருமான கண்ணப்பன் கூறியுள்ளார்.
கோவையில் செய்தியாளர்களிடம் கண்ணப்பன் பேசுகையில், எந்தவித கட்டாயத்திற்கும், நிர்பந்தத்திற்கும் கட்சிஅடி பணிந்து விடக் கூடாது என்பதில் மதிமுக தலைவர்கள் உறுதியாக இருக்க வேண்டும், அப்படியேஇருக்கிறோம்.
கூட்டணியில் இருப்பதா, வேண்டாமா என்பது குறித்து சுயமாக சிந்தித்து முடிவு எடுக்க வேண்டும். அமைச்சர்பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கட்சித் தலைமை கூறினால் உடனடியாக ராஜினாமா செய்யநாங்கள் தயாராகவே இருக்கிறோம்.
பெரியார், அண்ணா ஆகியோரின் கொள்கைகளுக்கு பங்கம் நேர்ந்து விடாதபடி, தெளிவான, தீர்க்கமான முடிவைகட்சி எடுக்க வேண்டும் என்று விரும்புகிறோம். எங்களது கருத்துக்களை வைகோவிடம் தெரிவித்து விட்டோம்.இனி அவர்தான் டிவு செய்ய வேண்டும்.
நாளை (இன்று) சென்னையில் நடைபெறவுள்ள மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தில் இதுகுறித்த இறுதி முடிவு அறிவிக்கப்படும் என்றார் கண்ணப்பன்.
அதிமுகவுடன் கூட்டணி சேர பா.ஜ.க. தயாராக உள்ளதாக வெங்கையா நாயுடு கூறியது குறித்துக் கேட்டபோது,இது பா.ஜ.க.வின் உட்கட்சி விவகாரம், இது குறித்துக் கருத்துக் கூற விரும்பவில்லை என்றார் கண்ணப்பன்.
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications