விலகலா? இல்லையா? மதிமுக இன்று முக்கிய முடிவு
சென்னை:
தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்தும், அமைச்சரவையிலிருந்தும் விலகுவது தொடர்பாக மதிமுக இன்று முக்கிய முடிவை அறிவிக்கவுள்ளது.
பொடா சட்டம் உள்ளிட்ட பல விஷயங்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத் தலைமை தாங்கும் பா.ஜ.க. அமைதி காத்து வந்ததாலும், திமுகவின் கோரிக்கைகளை ஏற்காமல் அலட்சியம் செய்து வந்ததாலும், மாநில பா.ஜ.க தலைவர்கள் மோதல் போக்கைக் கடைப்பிடித்ததாலும் கூட்டணியிலிருந்தும், அமைச்சரவையிலிருந்தும் விலகுவதாக திமுக அறிவித்தது.
ஆனால் மற்றொரு முக்கிய கட்சியான பாமக கூட்டணியிலிருந்து விலக மாட்டோம் என்று கூறி விட்டது. திமுகவின் பிம்பமாக கருதப்படும் மதிமுகவின் நிலைதான் படு குழப்பமாக உள்ளது.
கட்சியின் முன்னணித் தலைவர்கள் கூட்டணியிலிருந்து விலக வேண்டாம் என்று வைகோவிடம் கூறியுள்ளதாகத் தெரிகிறது. ஆனால் நமக்காகத்தான் திமுக கூட்டணியிலிருந்தும், அமைச்சரவையிலிருந்தும் விலகியுள்ளது. எனவே நாம் கட்டாயம் விலகியே தீர வேண்டும் என்று வைகோ கூறியுள்ளதாகத் தெரிகிறது.
இந் நிலையில் இன்று மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிற நிர்வாகிகளின் கூட்டம் நடக்கிறது. இந்தக் கூட்டத்தில் கூட்டணி குழப்பம் குறித்து விவாதிக்கப்படவுள்ளது. அப்போது வைகோவின் கருத்து குறித்து கட்சி நிர்வாகிகள் ஆலோசிக்க உள்ளனர். அதன் பின்னர் இறுதி முடிவை கட்சியின் அவைத் தலைவர் எல்.கணேசன் வெளியிடுவார்.
குழப்பமான சூழ்நிலை நிலவினாலும் கூட வைகோவின் எண்ணப்படியே கூட்டணியிலிருந்து வெளியேறும் முடிவையே இன்றைய மதிமுக கூட்டம் எடுக்கவுள்ளதாக உறுதியாகக் கூறப்படுகிறது.
-
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications