செங்கை நீதிமன்றத்தில் நெடுமாறன் இன்று ஜாமீன் மனு தாக்கல்
சென்னை:
செங்கல்பட்டு செஷன்ஸ் நீதிமன்றத்தில் பழ. நெடுமாறன் சார்பில் இன்று ஜாமீன் மனு தாக்கல் செய்யப்படுகிறது.
பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக சிறையில் வாடி வருகிறார் தமிழர்தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன். அவருடன் கைது செய்யப்பட்ட தமிழர் தேசிய இயக்கப் பிரமுகர்களில்இருவரைத் தவிர மற்ற நான்கு பேரும் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டு விட்டனர்.
றுநடுமாறனை சென்னை உயர் நீதிமன்றம் ஜாமீனில் விடுவித்தும் கூட, அவர் மீது 2 வழக்குகள் இருந்ததால்அவரால் சிறையிலிருந்து வெளியே வர முடியவில்லை. இந் நிலையில் திண்டுக்கல் வழக்கில் அவருக்கு ஜாமீன்கிடைத்தது.
ஆனால் ஆலந்தூர் நீதிமன்றத்தில் இருந்த வழக்கில் ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்புவருவதற்குள் நீதிபதி மாற்றப்பட்டு விட்டார். இதையடுத்து பூந்தமல்லி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் அவர்தாக்கல் செய்த ஜாமீன் மனு தள்ளுபடி ஆகி விட்டது.
இதைத் தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று நெடுமாறன் சார்பில் மேல் முறையீட்டுமனு தாக்கல் செய்யப்படுகிறது. இங்கும் நெடுமாறனின் மனு நிராகரிக்கப்பட்டால் சென்னை உயர் நீதிமன்றத்தைநெடுமாறன் நாட வேண்டும்.


Click it and Unblock the Notifications
