முன் கூட்டியே தேர்தல்: அத்வானி-தாக்கரே ஆலோசனை
மும்பை:
நாடாளுமன்றத்திற்கு முன்கூட்டியே தேர்தல் நடத்துவது தொடர்பாக துணைப் பிரதமர் அத்வானி சிவசேனா கட்சித்தலைவர் பால் தாக்கரேயுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.
சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் பா.ஜ.க. மூன்று மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்ததையடுத்துமக்களவைத் தேர்தலை முன்கூட்டியே நடத்த உத்தேசித்துள்ளது. இது குறித்து கூட்டணிக் கட்சிகளின் கருத்தைஅறிய முடிவெடுத்துள்ளது.
அதன் முதல் கட்டமாக தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முக்கிய கட்சியான சிவசேனா கட்சியின் தலைவர் பால்தாக்கரேவைச் சந்தித்து அத்வானி இன்று ஆலோசனை நடத்தினார்.
தாக்கரேவின் கருத்தை வரும் ஜனவரி 11 மற்றும் 12ம் தேதிகளில் ஹைதராபாத்தில் நடைபெறும் பா.ஜ.க. தேசியசெயற்குழுக் கூட்டத்தில் அத்வானி தெரிவிப்பார் என்று தெரிகிறது. தாக்கரேவுடனான சந்திப்பிற்குப் பின்செய்தியாளர்களிடம் பேசிய அத்வானி, கூட்டணியிலுள்ள மற்ற கட்சிகளின் கருத்தை அறிந்த பின்பே இது குறித்துஇறுதி முடிவு எடுக்கப்படும்.
முன் கூட்டியே தேர்தல் நடத்துவது தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு சாதகமாக அமையும். கூட்டணியிலிருந்துதிமுக விலகியது துரதிஷ்டவசமானது என்றார்.
மூன்றாவது அணி: கெளடா
இந் நிலையில் முன்னாள் பிரதமரும், ஜனதா தளத் தலைவருமான தேவேகெளடா இன்று செய்தியாளர்களிடம்பேசுகையில்,
வரும் மக்களவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காது. மத்தியில் தொங்குநாடாளுமன்றமே உருவாகும். தேர்தலுக்குப் பின் மூன்றாவது கூட்டணி அமையும். அதில் மாநிலக் கட்சிகள் முக்கியபங்கு வகிக்கும் என்று கூறியுள்ளார்.
-
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு












Click it and Unblock the Notifications