வைகோவின் கடிதம் படித்து கண் கலங்கிய வாஜ்பாய்
டெல்லி:
தனக்கு வைகோ எழுதிய உணர்ச்சிப்பூர்வமான கடிதத்தைப் படித்த பிரதமர் வாஜ்பாய் கண் கலங்கியதாக தகவல்கள் வந்துள்ளன.
இன்று தங்களது ராஜினாமா கடிதங்களைச் சமர்பித்த மதிமுக அமைச்சர்களான கண்ணப்பனும், செஞ்சி ராமச்சந்திரனும் வாஜ்பாயிடம் இன்னொரு கடிதத்தைத் தந்தனர். அது வாஜ்பாய்க்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனிப்பட்ட முறையில் எழுதிய கடிதம்.
சீல் இடப்பட்டு இருந்த அந்தக் கடிதத்தை தானே பிரித்தார் வாஜ்பாய். அந்த 6 பக்க கடிதத்தைப் படித்த வாஜ்பாயின் கண்களில் நீர் முட்ட செஞ்சியும் கண்ணப்பனும் அதிர்ந்துள்ளனர். மேற்கொண்டு, தொடர்ந்து பேச முடியாத வாஜ்பாய் இருவருக்கும் விடை கொடுத்து அனுப்பியுள்ளார்.
வைகோவும் கண்ணீர்:
இந் நிலையில் இன்று பூந்தமல்லி நீதிமன்றத்தில் வைகோ ஆஜர்படுத்தப்பட்டார். இதன் பின்னர் நிருபர்களிடம் அவர் பேசிக் கொண்டிருந்தபோது, அவரது உதவியாளர் வந்து வைகோவின காதில் ஏதோ சொல்ல, உடனே உணர்ச்சிவயப்பட்ட வைகோவின் கண்களில் இருந்து நீர் திரண்டது.
திடீரென வைகோ கண்ணீர் விட்டதால் ஆச்சரியமடைந்த நிருபர்கள், அதற்கான காரணத்தைக் கேட்டபோது,
நான் எழுதிய கடிதத்தை பிரதமர் வாஜ்பாய் படித்துவிட்டு கண் கலங்கியதாக செஞ்சி ராமச்சந்திரன் தகவல் அனுப்பியுள்ளார். இந்தச் செய்தியைத் தான் உதவியாளர் என்னிடம் இப்போது சொன்னார் என்றார்.
-
அப்பா விட்டதை பிடிக்கும் மகள்.. மதுரை அரசியலில் கால் பதிக்கும் கயல்விழி அழகிரி! தவெக தான் அடுத்து? -
அஜித் தாயார் மறைவு! அரணாக இருந்து அரவணைத்த தாயை இழந்த நண்பருக்கு இரங்கல்! முதல்வர் விஜய் பதிவு -
நாளை மறுநாள் திருச்சி செல்லும் விஜய்.. முதல்வரான பிறகு பொதுவெளியில் முதல் நிகழ்ச்சி! பிளான் என்ன? -
விஜய் - ராகுல் சந்திப்பு நடக்காமல் போனதற்கான உண்மைக் காரணம் என்ன? அதிர்ச்சி தரும் பின்னணி -
திருவள்ளுவருக்கு காவி பெயிண்ட்! முதல்வர் தயங்குவது ஏன்? விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கேள்வி -
ரூ.2500 உரிமைத்தொகை எப்போது கிடைக்கும்? நிதியமைச்சர் மரியவில்சன் கொடுத்த அப்டேட்! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
விஜய் வீட்டுக்கு பக்கத்தில் வீடு வாங்கணும்! பனையூரை வட்டமடிக்கும் ரியல் எஸ்டேட் முதலைகள்! என்ன விலை? -
விஜய் டெல்லி பயணம் 2.0.. அமித் ஷாவை எப்படியாவது சந்திக்க காய் நகர்த்தும் முதல்வர்.. மீண்டும் ட்ரிப்? -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications