கண்ணப்பன், செஞ்சி ராமச்சந்திரன் ராஜினாமா: பிரதமரிடம் கடிதம் தந்தனர்
டெல்லி:
மதிமுகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் மு.கண்ணப்பன், செஞ்சி ராமச்சந்திரன் ஆகியோர் இன்று தங்களதுபதவிகளை ராஜினாமா செய்தனர்.
நேற்றிரவு டெல்லி வந்த இருவரும் இன்று காலை பிரதமர் வாஜ்பாயைச் சந்தித்து தங்களது ராஜினாமா கடிதங்களைநேரில் வழங்கினர். தனிப்பட்ட முறையில் வாஜ்பாய்க்கு வைகோ எழுதியிருந்த கடிதத்தையும் அவரிடம் தந்தனர்.
இதன் பின்னர் நிருபர்களிடம் அவர்கள் கூறியதாவது:
தமிழகத்தில் திராவிட இயக்கத்தை வலுப்படுத்தும் நடவடிக்கைகளைத் துவக்கவுள்ளோம். அதற்காக திமுகதலைவர் கருணாநிதி தலைமையில் கூட்டணி அமைப்போம். அவர் பெரும் அணியை உருவாக்கவுள்ளார். அவர்எடுக்கும் எல்லா முடிவுகளுக்கும் மதிமுக கட்டுப்படும்.
கூட்டணியில் காங்கிரசும் இருக்குமா, இல்லையா என்பதை கருணாநிதி தான் முடிவு செய்வார். காங்கிரஸ்- திமுககூட்டணியை கருணாநிதி அமைத்தால் அதில் மதிமுகவும் இடம் பெறுவதில் சிக்கல் ஏதும் இருக்காது. புலிகள்விவகாரமும் இதில் முட்டுக் கட்டையாக இருக்காது.
இலங்கைத் தமிழர்களின் அவலங்களைத் தான் மதிமுக எடுத்துக் காட்டியதே தவிர, வன்முறையை வைகோ என்றும்ஆதரித்தது இல்லை என்பது காங்கிரசுக்கு நன்றாகவே தெரியும்.
ஜாமீனில் வெளியே வருமாறு வைகோவுக்கு கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து வைகோவுடன்நாங்கள் பேசுவோம். எங்கள் ராஜினாமாவை மறு பரிசீலனை செய்யும்படி பிரதமரும் கோரவில்லை. அதற்குநாங்களும் தயாராக இல்லை.
வைகோ சிறையில் இருந்தபோது நாங்கள் அமைச்சர்களாக இருந்தது எங்களுக்குள் குற்ற உணர்வைத் தந்தது.இப்போது அந்த குற்ற உணர்ச்சி விலகி மகிழ்ச்சியாக இருக்கிறோம் என அவர்கள் கூறினர்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறுவது என்ற முடிவை நேற்று அக் கட்சி எடுத்தது.
-
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா












Click it and Unblock the Notifications