284 தனியார் மதுக்கடைகள் நடத்த நீதிமன்றம் அனுமதி: எதிர்த்து அப்பீல் செய்கிறது அரசு
சென்னை:
284 தனியார் மதுக்கடைகளைத் திறக்க அனுமதியளித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு தமிழக அரசு செய்ய முடிவு செய்துள்ளது. அந்தக் கடைகளுக்கு உரிமம்வழங்குவதை நிறுத்தி வைக்குமாறு மாவட்ட கலால் பிரிவு அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
டாஸ்மார்க் நிறுவனமும், கூட்டுறவுச் சங்கங்களும் இணைந்து மதுபான விற்பனை செய்வதற்கான அவசரச்சட்டத்தை தமிழக அரசு கடந்த அக்டோபர் 26ம் தேதி பிறப்பித்தது. அதை எதிர்த்து தனியார் மதுபானவியாபாரிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இவ் வழக்கில் நேற்று தீர்ப்புவழங்கப்பட்டது.
தீர்ப்பில் கூறப்பட்டிருந்ததாவது:
டாஸ்மார்க்கோ கூட்டுறவு சங்கங்களோ மாநில அரசின் முகவர்களாகச் செயல்படுவதைத் தடை செய்ய சட்டத்தில்இடமில்லை. கூட்டுறவுச் சங்கங்கள் மது விற்பனை செய்வது புதிதல்ல. எனவே அரசு பிறப்பித்த அவசரச் சட்டம்செல்லுபடியாகும்.
அதே நேரத்தில் கடந்த வருடம் ஜூலை 7ம் தேதிக்கு முன், ஒயின் ஷாப் நடத்த உரிமக் கட்டணம் செலுத்தியுள்ள284 பேரும் அனுமதிக்கப்பட்ட காலம் வரை உரிமத்தைப் புதுப்பித்து கடைகளை நடத்லாம். அவர்களுக்கு இந்தஅவசரச் சட்டம் பொருந்தாது.
ஜூலை 7ம் தேதிக்குப் பின் உரிமக் கட்டணம் செலுத்தியவர்களுக்கு அரசு 15 சதவீத வட்டியுடன் செலுத்தியதொகையைத் திருப்பித் தரவேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதுவரை,284 கடைகளைத் திறக்க அனுமதிக்க வேண்டாம் என்று மாவட்ட கலால் பிரிவு அதிகாரிகளுக்கு உத்தரவுபிறப்பிக்கப்பட்டுள்ளது.
-
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications