அதிமுகவுடன் கூட்டணி: பா.ஜ.கவில் பிளவு?
கோயம்புத்தூர்:
அதிமுகவுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக பா.ஜ.கவில் பிளவு ஏற்பட்டது. பா.ஜ.கவுக்கு கொஞ்சம்செல்வாக்கு உள்ள கோவை, நீலகிரி, ஈரோடு, நாகர்கோவில் பகுதிகளைச் சேர்ந்த பா.ஜ.க. மாவட்டச் செயலாளர்அதிமுகவுடனான கூட்டணிக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
தேவையே இல்லாமல் திமுகவை விமர்சித்து கூட்டணியில் பிளவை உருவாக்கிவிட்டதாக பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளரும் எம்.எல்.ஏவுமான எச்.ராஜா உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்கள் மீது அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தமிழகத்தில் அதிமுகவுக்கு எதிரான அலை பரவ ஆரம்பித்துள்ளதாகக் கருதும் அவர்கள், இந்த நேரத்தில் போய்அக் கட்சியுடன் கூட்டணி அமைப்பது பெரும் தோல்விக்கே வழி வகுக்கும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
பெரும்பலான பா.ஜ.க. இரண்டாம் மட்டத் தலைவர்களும் தொண்டர்களும் அதிமுக உறவை விரும்பவில்லைஎன்பது அக் கட்சியே நடத்திய நேரடி ஆய்வில் தெரியவந்துள்ளது. தேர்தலில் கூட்டாக நின்று வென்றால் கூடமத்தியில் ஆட்சியமைக்க அதிமுகவின் ஆதரவு நமக்கு நிச்சயமாகக் கிடைக்கும் என்று சொல்ல முடியாது எனஅவர்கள் கூறியுள்ளனர்.
சமீபத்தில் இம் மாவட்டங்களின் தொண்டர்கள், தலைவர்களின் கருத்தறியச் சென்ற பா.ஜ.க. மத்தியத்தலைவர்களுக்கு தொண்டர்களின் இந்தக் கருத்து பெரும் அதிர்ச்சியைத் தந்துள்ளது. திமுகவைப் பிடிக்காத சிலதலைவர்களின் பேச்சைக் கேட்டு அக் கட்சியுடனான உறவு முறியும் அளவுக்கு நிலைமையை மத்தியத் தலைமைவளர விட்டதாகவும் அவர்கள் நேரடியாகக் குற்றம் சாட்டி அதிர்ச்சி தந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications
