போகி: ரப்பர், பிளாஸ்டிக் பொருள்களை எரிக்க நீதிமன்றம் தடை
சென்னை:
போகிப் பண்டிகையன்று ரப்பர், பிளாஸ்டிக் போன்றவற்றை சாலைகளில் எரிக்கக் கூடாது சென்னைஉயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
பொங்கலுக்கு முதல் தினமான ஜனவரி 13ம் தேதி போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அப்போது பழையபொருட்களை சாலையில் போட்டு எரிப்பது வழக்கம். ஆனால் கடந்த சில வருடங்களாக டயர்கள், பிளாஸ்டிக்போன்ற பொருட்களையும் மக்கள் எரிக்க ஆரம்பித்துள்ளனர்.
இதனால் துர்நாற்றமும், கரும்புகையும் எழுந்து சுற்றுச்சூழல் கெட்டுச் சீரழிகிறது. இதைத் தடுக்கக் கோரிஎக்ஸ்னோரா இன்டர்நேஷனல் அமைப்பின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல்செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி, நீதிபதி ஏ.கே.ராஜன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச்,போகி பண்டிகை தினத்தன்று வறட்டிகள், கட்டைகள் போன்றவை மட்டுமே எரிக்கப்பட வேண்டும். பழையபொருட்கள் என்ற பெயரில் டயர்கள், பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவற்றை எரிக்கக் கூடாது.
இந்த உத்தரவை தமிழகத்தில் உள்ள அனைத்துக் காவல் நிலையங்களுக்கும் தெரிவித்து, தீவிரமாககண்காணிக்கும்படி அனைத்துக் காவல்துறை அதிகாரிகளையும் மாநில டிஜிபி கேட்டுக் கொள்ள வேண்டும் என்றுஉத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications