பொன்னையனை இரவில் சந்தித்த அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள்
சென்னை:
தமிழக நிதியமைச்சர் பொன்னையனை தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பானஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் சந்தித்துப் பேசினர். பணி நீக்கம் செய்யப்பட்ட அனைவரையும் மீண்டும் பணியில்சேர்த்துக் கொள்ளுமாறு கோரிக்கை விடுத்தனர்.
வேலை நிறுத்தம் செய்து டிஸ்மிஸ் ஆன ஊழியர்களின் வழக்குகளை விசாரித்த 3 நீதிபதிகள் குழு தங்களதுவிசாரணை அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்து விட்டது.
இதன் அடிப்படையில் தலைமைச் செயலகம், சென்னை மாவட்டம் நீங்கலான பிற மாவட்ட அரசு ஊழியர்கள்மீதான தீர்ப்பு இன்னும் ஓரு நாட்களில் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.
பிற மாவட்டங்களைச் சேர்ந்த 400 ஊழியர்கள் வரை டிஸ்மிஸ் ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில், ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் நேற்றிரவு நிதியமைச்சர் பொன்னையனை சந்தித்தனர்.
3 நீதிபதிகளின் விசாரணை அறிக்கையை அடிப்படையாகக் கொள்ளாமல், பணி நீக்கம் செய்யப்பட்டஅனைவரையும் மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும் என்று அப்போது ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள்,பொன்னையனிடம் கோக்கை விடுத்தனர்.
இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஒரு மனுவையும் பொன்னையனிடம் அளித்தனர்.












Click it and Unblock the Notifications