அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை குறைப்பு: நீதிமன்றம் இடைக்கால தடை
சென்னை:
தமிழக அரசு ஊழியர்களுக்கு விடுமுறை நாட்களை 22 நாட்களிலிருந்து 16 நாட்களாக குறைத்திருப்பதற்குசென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் அரசு விடுமுறை நாட்களை 22 நாட்களிலிருந்து 16 நாட்களாகதமிழக அரசு குறைத்துவிட்டது. இதனால் ஆங்கிலப் புத்தாண்டு தினமான இன்று அரசு ஊழியர்கள் வேலைக்குவந்தனர்.
இந் நிலையில் விடுமுறை நாட்களைக் குறைத்ததை எதிர்த்து தமிழக மின்வாரிய தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் அங்கப்பன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அதில், தொழில் தாவா சட்டத்திற்குப் புறம்பாக விடுறை நாட்களை தமிழக அரசு குறைத்துள்ளது. ஆங்கிலப்புத்தாண்டு, தமிழ்ப் புத்தாண்டு போன்றவை பாரம்பரியமாக நாம் கொண்டாடி வரும் நாட்களாகும். இவற்றைவேலை நாட்களாக அறிவித்துள்ளது சட்டவிரோதமானது.
தமிழக அரசின் இந்த முடிவு தன்னிச்சையானது. விடுமுறை நாட்களைக் குறைக்க அரசுக்கு அதிகாரம் இல்லைஎன்று கூறியிருந்தார் அவர்.
மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.பாலசுப்ரமணியம், அரசின் அறிவிப்புக்கு இடைக்காலத் தடை விதித்தார்.












Click it and Unblock the Notifications