நெடுமாறனின் ஜாமீன் மனு மீது நாளை விசாரணை
செங்கல்பட்டு:
தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணை நாளை(வெள்ளிக்கிழமை) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளின் முன்னணித் தலைவர்களில் ஒருவராக இருந்த கிட்டு குறித்து புத்தகம் வெளியிட்டதுதொடர்பாக நெடுமாறன் மீது மீனம்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கிலிருந்து தன்னை ஜாமீனில் விடக் கோரி ஆலந்தூர் நீதிமன்றத்தில் நெடுமாறன் மனு தாக்கல்செய்திருந்தார்.
மனு மீதான விசாரணை முடிவடைந்து, தீர்ப்பு வழங்கப்பட வேண்டிய நிலையில் நீதிபதியை தமிழக அரசு திடீரெனஇடமாற்றம் செய்துவிட்டது. இதையடுத்து பூந்தமல்லி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நெடுமாறனின் சார்பில்ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அங்கு அவரது ஜாமீன் மனு நிராகக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் நெடுமாறனின் வழக்கறிஞர் சந்திரசேகர்ஜாமீன் மனுவைத் தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது, அரசு வக்கீல் ஆறுமுகம் 2ம்தேதி வரை மனு மீதான விசாரணையைத் தள்ளி வைக்குமாறு கோரிக்கை விடுத்தார்.
அதை ஏற்ற நீதிபதி பெரிய கருப்பையா வழக்கை 2ம் தேதிக்கு வழக்கை தள்ளி வைத்தார்.
பொடா சட்டத்தில் ஜாமீன் பெற்றுவிட்டாலும், இந்த வழக்கில் ஜாமீன் கிடைக்காததால் தொடர்ந்து சிறையிலேயேஅடைக்கப்பட்டுள்ளார் நெடுமாறன்.












Click it and Unblock the Notifications