தமிழகம் முழுவதும் உற்சாகக் கொண்டாட்டம்: ஓவராக குடித்த 2 பேர் பலி!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

2004ம் ஆண்டுக்கு விடை கொடுத்து, 2004ம் ஆண்டை தமிழக மக்கள் அதிக உற்சாகத்துடன் வரவேற்றுக்கொண்டாடினர். உற்சாக மிகுதியில் அளவுக்கு அதிகமாக மது அருந்திய இருவர் பலியாயினர்.

2004ம் ஆண்டின் கடைசி நாளான நேற்று மாலை முதலே கொண்டாட்டங்கள் தொடங்கி விட்டன. சென்னையில்ஹோட்டல்கள், கடற்கரைகள், மாமல்லபுரம் உள்ளிட்ட முக்கிய இடங்கள் அனைத்திலும் குடும்பம் குடும்பமாகவும்,நண்பர்கள், குழந்தைகள் என சகல தரப்பினரும், வயது வித்தியாசம் இல்லாமல் குழுமினர்.

ஹோட்டல்களில் நடன, பாட்டு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதுதவிர அடுக்குமாடிக்குடியிருப்புகளில், மொட்டை மாடிகளில் கொண்டாட்டங்கள் நடந்தன. ஆட்டம், பாட்டுமாக புத்தாண்டைவரவேற்க மக்கள் உற்சாகத்துடன் நேரத்தைக் கரைத்துக் கொண்டிருந்தனர்.

நள்ளிரவு 12 மணி அடித்தவுடன் கொண்டாட்டம் உச்ச கட்டத்தை எட்டியது. அறிமுகம் ஆனவர், ஆகாதவர்,தெரிந்தவர், தெரியாதவர் என்ற பாகுபாடு இல்லாமல் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களைப் பறிமாறிக்கொண்டனர்.

மெரீனா கடற்கரையில், கூடியிருந்த பல்லாயிரக்கணக்காவர்களும் ஹேப்பி நியூ இயர் என்று உற்சாககூக்குரலிட்டதில், கடல் அலைகளுக்கு சப்த நாடியும் அடங்கிப் போயிருக்கும்.

இதேபோல, அண்ணா சாலையிலும் மக்கள் வெள்ளம் அலைமோதியது. ஸ்பென்சர் கட்டடம் அருகேஅண்ணாசாலையில் பல்லாயிரக்கணக்கான பொது மக்கள் கூடி புத்தாண்டை உற்சாகமாக வரவேற்றனர்.

பெசன்ட் நகர், அடையார் உள்ளிட்ட சில பகுதிகளில் மக்கள் வெள்ளத்தால் போக்குவரத்து சுத்தமாக நின்றுபோனது, கால்நடையாக மாறி புத்தாண்டு கொண்டாட்ட ஜோதியில் மக்கள் ஐக்கியமாகினர்.

தனியார் மதுக்கடைகள் இல்லாத நிலையில் தமிழகம் முழுவதுமே அரசு மதுக் கடைகளில் அட்டகாச விற்பனைநடந்தது. இரவு 12 மணியுடன் மூடப்பட வேண்டிய கடைகள் 1 மணியைத் தாண்டியும் படு பிசியாக பிசினஸ்செய்ததைப் பார்க்க முடிந்தது.

குடி மக்களின் கூட்டத்தைக் கண்டு மிரண்டு போன டாஸ்மாக் ஊழியர்கள், அவர்களைக் கையாள முடியாமல்தவித்ததையும் பார்க்க முடிந்தது.

வெளியில் சென்று புத்தாண்டை வரவேற்க முடியாதவர்கள் வீட்டில் இருந்து டிவிகளில் புத்தாண்டு கொண்டாட்டசிறப்பு நிகழ்ச்சிகளைப் பார்த்து ரசித்தனர்.

தமிழகம் முழுவதுமே உற்காசம் கரைபுரண்டது. பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு மாநிலம் முழுவதிலும் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்ததால் விரும்பத்தகாத சம்பவம் ஏதும் நடக்கவில்லை. அதே நேரம் வாய்த் தகராறுகள், லேசானமோதல்கள், சிறிய அளவிலான விபத்துக்களும் நடந்தேறின.

இருவர் பலி:

புத்தாண்டைக் கொண்டாட சென்னை ஐசிஎப் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஜெகன்நாதன் (36) என்பவர்நண்பர்களுடன் விடிய, விடிய குடித்தார். போதையில் குடிநீர்த் தொட்டியின் மீது படுத்துத் தூங்கினார். மயக்கத்தில்உருண்டு கீழே விழுந்தவர் சாக்கடைக் கால்வாயில் விழுந்து மூழ்கினார். சிறிது நேரத்தில் உயிர் போனது.

அதே பகுதியைச் சேர்ந்த பாபு என்பவரும் மிக அதிகமாகக் குடித்துவிட்டுத் தூங்கினார். காலையில் எழவேஇல்லை. மருத்துவர்களை அழைத்து வந்து சோதனையிட்டபோது அவர் இறந்து போனது தெரியவந்தது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+