ஜெயலலிதாவுடன் லார்ட் சுவராஜ் பால் சந்திப்பு
சென்னை:
இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டனின் பிரபல தொழிலதிபரும் அந் நாட்டு எம்.பியுமான லார்ட் சுவராஜ்பால் இன்று முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினார். அப்போது பிரிட்டிஷ் நிறுவனங்கள் தமிழகத்தில்முதலீடு செய்வது குறித்து இருவரும் முக்கிய ஆலோசனை நடத்தினர்.
கோட்டையில் இன்று காலை நடந்த இச் சந்திப்புக்குப் பின் முதல்வரை லார்ட் பால் வெகுவாகப் பாராட்டினார்.
லார்ட் பால் கூறியதாவது: தமிழகத்துக்கு பிரிட்டிஷ் தொழிற்சாலைகளைக் கொண்டு வருவது குறித்து ஆர்வமுடன்ஜெயலலிதா கேள்விகள் கேட்டார். அதற்கான வாய்ப்புக்களை விளக்கினேன். தமிழகத்தில் பிரிட்டிஷ்நிறுவனங்களுக்கு நல்ல வாய்ப்புக்கள் இருப்பதாக ஜெயலலிதா தெரிவித்தார்.
இது தொடர்பாக முதல்வருடன் மேலும் பல சுற்ற ஆலோசனைகள் நடத்தப்படும். எதைச் செய்ய முடியுமோ அதைமட்டும் தான் ஜெயலலிதா சொல்கிறார். எதைச் சொல்கிறாரோ அதைச் செய்து முடித்துக் காட்டும் ஆர்வமும் திடமானஉறுதியும் அவரிடம் உள்ளதை இந்த சந்திப்பின்போது உணர்ந்து கொண்டேன்.
சென்னைக்கு மிக அதிகமான பிரிட்டிஷ் தொழில்துறையினரைக் கொண்டு வர முடியும். தமிழகத்தின் குடிநீர்பிரச்சனைக்கு தீர்வு காண்பது முதல் பல்வேறு துறைகளில் பிரிட்டன் முதலீடு செய்ய முடியும். அதே போல பேஷன்டிசைனிங்கிலும் தமிழகம் முன்னணியில் உள்ளது. இத் துறையிலும் தமிழகத்தில் பிரிட்டன் ஈடுபடலாம் என்றார்.












Click it and Unblock the Notifications