அம்மா வாங்க.. அய்யா வாங்க..: 10 சீட்டு குடுத்தா கூட்டணி
திண்டிவனம்:
நாடாளுமன்றத் தேர்தலில் 10 இடங்கள் கொடுக்கும் கட்சியுடன் பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணி வைக்கத் தயார்என்று அக் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
திண்டிவனம் அருகே தைலாபுரத்தில் நடந்த பாமக பொதுக் குழுக் கூட்டத்திற்குப் பின்னர் தொண்டர்களிடையேஅவர் பேசுகையில், பாட்டாளி மக்கள் கட்சிக்கு வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 10 இடங்களை ஒதுக்கும்அரசியல் கட்சியுடன்தான் கூட்டணி வைப்போம்.
கடந்த 1998ம் ஆண்டு முதல் பாமகஇடம் பெறும் கூட்டணிதான் தமிழக தேர்தலில் வெற்றிக் கூட்டணியாகதிகழ்கிறது. தற்போது பாமகவில் 5 எம்.பிக்கள் உள்ளனர். இதை இரட்டிப்பாக்க வேண்டும்.
பாமக தொண்டர்கள் தேர்தல் தொடர்பான பணிகளை தொடங்க வேண்டும் என்றார் அவர்.
நேற்றிரவு நடந்த பொதுக் குழுக் கூட்டத்தில், கூட்டணி தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரத்தை ராமதாஸிடம்வழங்கி கட்சி தீர்மானம் நிறைவேற்றியது.












Click it and Unblock the Notifications