எலெக்ட்ரானிக் ரேஷன் கார்டுகளை அறிமுகப்படுத்த தமிழக அரசு திட்டம்
சென்னை:
தமிழகத்தில் மின்னனு குடும்ப அட்டைகளை அறிகப்படுத்த மாநில அரசு பரிசீலனை செய்து வருகிறது.
புத்தக வடிவில் இருக்கும் குடும்ப அட்டைகளை ஒழித்து விட்டு, கிரடிட் கார்டுகளைப் போன்ற இ-கார்டுகள்எனப்படும் மின்னனு குடும்ப அட்டைகளை அறிமுகப்படுத்தலாம் என தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
அடுத்த ஆண்டு ஜனவரி 1ம் தேதி குடும்ப அட்டைகள் புதுப்பிக்கப்படவுள்ளன. அப்போது இந்த இ-கார்டுகள்எனப்படும் மின்னனு குடும்ப அட்டைகளை அறிமுகப்படுத்தப்படலாம் என தலைமைச் செயலக வட்டாரங்கள்தெரிவிக்கின்றன.
இதன்மூலம் ரேசன் கடைகளில் அநாவசியமான ஊழியர்களைக் குறைப்பதோடு, ஸ்டாக்குகள் உள்ளிட்டகடையின் கணக்கு, வழக்குகளை அப்-டு-டேட் ஆக வைக்க முடியும் என அரசு கருதுகிறது.
இதற்கிடையே, ரூ. 5,000க்கு மேல் ஊதியம் உள்ளவர்களின் குடும்ப அட்டைகளில் எச் முத்திரை குத்தி அவற்றைகெளரவ ரேசன் கார்டுகளாக மாற்ற நேற்று தான் கடைசி நாளாகும். அந்தக் காலக் கெடுவுக்குள், 18.5 லட்சம் பேர்தங்களது குடும்ப அட்டைகளை கெளரவ அட்டைகளாக மாறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதைச் செய்யத் தவறியவர்களின் கார்டுகள் ரத்தாகலாம் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications