விபத்தில் சிக்கியவர்களை மீட்ட மத்திய அமைச்சர்

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி:

கன்னியாகும மாவட்டம் தக்கலை அருகே நடந்த சாலை விபத்தில் காயமடைந்த ஐயப்ப பக்தர்கள் மற்றும்திண்டுக்கல் டாக்டர் குடும்பத்தைச் சேர்ந்தவர்களை பா.ஜ.க. மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மீட்டுமருத்துவமனையில் சேர்த்தார்.

திண்டுக்கல்லைச் சேர்ந்த டாக்டர் ராமநாதன் தனது குடும்பத்தினருடன் திருவனந்தபுரம் சென்று விட்டு காரில் ஊர்திரும்பிக் கொண்டிருந்தார். தக்கலை அருகே வில்லுக்குறி என்ற இடத்தில் கார் வந்தபோது, எதிரே வந்த ஐயப்பபக்தர்களின் வேனுடன் நேருக்கு நேர் மோதியது.

இதில் டாக்டர் ராமநாதன், அவரது மனைவி உமா, மகன் ஆதித்யா, கார் டிரைவர் ராமச்சந்திரன் ஆகியோரும்,ஐயப்ப பக்தர்களான மாதவ ரெட்டி, கருணாகர ரெட்டி, சீனிவாச ரெட்டி, திருப்பதி ரெட்டி உள்ளிட்ட 9 பேரும்படுகாயமடைந்தனர். ரத்த வெள்ளத்தில் அவர்கள் கிடந்தனர்.

அப்போது திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அந்த வழியாக காரில் வந்தார் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன். விபத்து நடந்ததைப் பார்த்ததும் காரை நிறுத்திய அவர் தனது பாதுகாப்புக்கு வந்த போலீஸார்மற்றும் பிற கார்களில் வந்த பா.ஜ.க. தொண்டர்களின் உதவியுடன் மீட்புப் பணியில் இறங்கினார்.

அமைச்சரும் மற்றவர்களும் சேர்ந்து காயமடைந்தவர்களை மீட்டனர். பின்னர் தன்னுடன் வந்த கார்களில்அவர்களை நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சேர்க்குமாறு உத்தரவிட்டார்.

இதையடுத்து அவர்களை பா.ஜ.க. தொண்டர்கள் மருத்துவமனையில் சேர்த்துவிட்டுத் திரும்பினர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+