ஜெவுக்கு அத்வானி புத்தாண்டு வாழ்த்து: பா.ஜ.க.- அதிமுக கூட்டணி குறித்து ஆலோசனை
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதியை சோனியா காந்தி தொலைபேசியில் தொடர்பு கொண்டு புத்தாண்டு வாழ்த்துத்தெரிவித்ததையடுத்து காங்கிரஸ்- திமுக இடையிலான உறவை ஆரம்பித்துவிட்டார்.
இந் நிலையில் முதல்வர் ஜெயலிதாவை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட துணைப் பிரதமர் அத்வானிபுத்தாண்டு வாழ்த்து தெவித்ததோடு அதிமுக- பா.ஜ.க இடையே நேரடி உறவைத் துவக்கி வைத்துள்ளார்.
கடந்த 1999ம் ஆண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து வெளியேறினார் ஜெயலலிதா. அதற்குப் பிறகுஅதிமுகவுக்கும், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் தொடர்பு இல்லாமல் போனது. ஆனாலும் பா.ஜ.கவில் உள்ளஅத்வானி கோஷ்டிக்கும் ஜெயலலிதாவுக்கும் இடையே மறைமுகமான உறவு நீடித்து வந்தது.
இதனால் தான் திமுகவும் மதிமுகவும் வெளியே போக வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டன.
இந் நிலையில் சமீபத்திய அரசியல் சூழ்நிலைகள், ஜெயலலிதாவையும், அத்வானி உள்ளிட்ட பிற பா.ஜ.க.தலைவர்களையும் மேலும் நெருங்கி வரச் செய்துள்ளது.
தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் அதிமுகவை மீண்டும் கொண்டு வர துணைப் பிரதமர் அத்வானிதிட்டமிட்டுள்ளார். வெளியில் மூன்றாவது அணி அமைப்பேன் என்று முதல்வர் ஜெயலலிதா கூறி வந்தாலும் கூட,பா.ஜ.கவுடன் கூட்டணி அமைக்கத் தயாராகிவிட்டார்.
இந் நிலையில் ஆங்கிலப் புத்தாண்டு தினத்தையொட்டி அத்வானி, ஜெயலலிதாவுக்கு தொலைபேசி மூலம்வாழ்த்துத் தெரிவித்தார். பதிலுக்கு ஜெயலலிதாவும் வாழ்த்து சொன்னார்.
அத்தோடு இரு தரப்பிலும் கூட்டணி குறித்து பூர்வாங்கமாக பேசப்பட்டதாகவும் தெரிகிறது.
பிரதமருக்கான வேட்பாளர் அத்வானி?
இதற்கிடையே இந்தியா டுடேவுக்கு பிரதமர் வாஜ்பாய் அளித்துள்ள பேட்டியில், வரும் தேர்தலில் பா.ஜ.க. மீண்டும்வென்றால் அடுத்த பிரதமர் யார் என்பதை கட்சி தான் முடிவு செய்யும். எனக்கு கடவுள் மற்றும் தலைவிதியின் மீதுநம்பிக்கை உள்ளது என்று கூறியுள்ளார்.
இதனால் அடுத்து பா.ஜ.க. வென்றாலும் தான் பிரதமராவேன் என்று சொல்வதற்கில்லை என்பதை வாஜ்பாய்தெளிவுபடுத்திவிட்டார். இதன்மூலம் வாஜ்பாயை ஓரம்கட்டும் வேலை பா.ஜ.கவில் தீவிரமாக நடந்து வருவதுதெளிவாகிறது.
தேசிய ஜனநாயகக் கூட்டணி வென்றால் அடுத்து அத்வானியே பிரதமர் பதவிக்கு நிறுத்தப்படுவார் என்றுதெரிகிறது. அது குறித்தும் ஜெயலலிதாவுடன் அத்வானி பேசியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
-
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!











Click it and Unblock the Notifications