மேலும் 412 அரசு ஊழியர்கள் டிஸ்மிஸ்: மொத்தம் 999 பேர் பதவி பறிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மேலும் 412 பேர் டிஸ்மிஸ்செய்யப்பட்டுள்ளனர். இதையும் சேர்த்து பதவி நீக்கம் செய்யப்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின்எண்ணிக்கை 999 ஆகியுள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்த வேலை நிறுத்தப் போராட்டத்தையடுத்து சுமார் 1 லட்சம் அரசு ஊழியர்கள்,ஆசிரியர்களை தமிழக அரசு அதிரடியாக டிஸ்மிஸ் செய்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டவழக்கில் 6,072 பேரின் மீதான வழக்குகளை 3 நீதிபதிகள் கொண்ட குழு அமைத்து விசாரிக்கும்படியும்,மற்றவர்களுக்கு மீண்டும் வேலை கொடுக்கும்படியும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து 6,072 அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான வழக்கை விசாரிக்க நீதிபதிகள் மலைசுப்ரமணியம்,சம்பத், தங்கவேல் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவினர் 3 மாதமாக விசாரணைநடத்தினர்.

முதலில் சென்னை மாவட்ட அரசு ஊழியர்கள் மற்றும் தலைமைச் செயலக ஊழியர்கள் மீதான விசாரணை அறிக்கைஅரசிடம் கொடுக்கப்பட்டது. அதில், 587 பேரை டிஸ்மிஸ் செய்ய பரிந்துரைந்தனர். மேலும் 2,162 பேருக்குஅடுத்த 3 ஆண்டுகளுக்கு சம்பள உயர்வை ரத்து செய்யவும் உத்தரவிட்டனர்.

132 பேரை மட்டுமே எந்த தண்டனையும் வழங்காமல் மீண்டும் பணியில் சேர்க்கக் கூறினர்.

இந் நிலையில் பிற மாவட்டங்களைச் சேர்ந்த ஊழியர்கள் மீதான வழக்கை விசாரித்த நீதிபதி தங்கவேல் கடந்த 31ம்தேதி தனது விசாரணை அறிக்கையை அரசிடம் தாக்கல் செய்தார்.

இந்த அறிக்கையின் அடிப்படையில் அரசு வெளியிட்டுள்ள உத்தரவு:

பிற மாவட்டங்களில் வேலை நிறுத்தம் செய்து டிஸ்மிஸ் ஆனவர்கள் 2,771 பேர். இவர்களில் 412 அரசு ஊழியர்கள்டிஸ்மிஸ் செய்யப்படுகின்றனர்.

70 பேர் மீதான குற்றச்சாட்டுக்கள் ரத்து செய்யப்படுகின்றன. 2 பேருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. மீதமுள்ள2,287 பேருக்கு பதவி இறக்கம், சம்பள உயர்வு ரத்து ஆகியவை அமலாக்கப்படுகின்றன.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தை அணுகப் போவதாக ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளில் ஒருவரானகு.பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இந்தத் தீர்ப்புஊழியர் நடத்தை விதிமுறைகளுக்கு உட்பட்டோ, சட்டத்திற்கு உட்பட்டோ வழங்கப்படவில்லை. மிகக்கடுமையான தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது.

எனவே இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளோம். டிஸ்மிஸ்செய்யப்பட்டுள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மனம் தளர வேண்டாம் என்றார்.

முதல்வர் ஜெயலலிதாவுக்கு ராசியான எண்ணான 9 என்ற கூட்டுத் தொகை வரும் வகையில் மொத்தம் 999 அரசுஊழியர்கள், ஆசிரியர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+