பட்டியல் அனுப்புவதில் தாமதம்: அரசு ஊழியர்கள் மீண்டும் பணியில் சேருவதில் குழப்பம்
சென்னை:
3 நீதிபதிகள் குழுவின் தீர்ப்புக்குப் பிறகு மீண்டும் பணியில் சேர உத்தரவிடப்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும்ஆசிரியர்கள் இன்று பணியில் சேர வந்தபோது, அவர்களது பெயர்ப் பட்டியல் வெளியிடப்படவில்லை என்று கூறிபணியில் சேர விடாமல் அதிகாரிகளால் தடுக்கப்பட்டனர்.
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு டிஸ்மிஸ் ஆகிய 2,771 அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்பானவிசாரணை அறிக்கையை 3 நீதிபதிகள் குழு அரசிடம் சமர்ப்பித்ததையடுத்து, அதுதொடர்பான முடிவை அரசுநேற்று வெளியிட்டது.
அதன்படி 2,771 பேல் 412 பேர் நிரந்தரமாக டிஸ்மிஸ் செய்யப்பட்டனர். 77 பேர் மீது எந்தவித நடவடிக்கையும்எடுக்கப்படவில்லை. மற்றவர்கள் மீது பதவி இறக்கம், அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.இவர்களில் 412 பேர் தவிர மற்றவர்கள் இன்றே பணியில் சேருமாறு அரசு உத்தரவிட்டிருந்தது.
அதன் அடிப்படையில், 2,359 அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இன்று தங்களது அலுவலகங்களுக்குச்சென்றனர். ஆனால், இன்று பிற்பகல் வரை பணியில் சேர உத்தரவிடப்பட்ட ஊழியர்களின் பெயர்கள் அடங்கியபட்டியல் சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு சென்னையில் இருந்து வந்து சேரவில்லை.
இதனால் அவர்கள் மீண்டும் பணியில் சேருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
பணி இறக்கம் செய்யப்பட்ட அரசு ஊழியர்களுக்கு என்ன பதவி கொடுப்பது என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளதால்பட்டியலை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இதனால் மதுரை, திருச்சி, சேலம், கோவை உள்ளிட்ட சில ஊர்களில் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும்தங்களது அலுவலகங்களில் காத்துக் கொண்டுள்ளனர்.
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!










Click it and Unblock the Notifications