தாமரைக்கனியை அடித்த இன்ஸ்பெக்டரை கைது செய்ய வாரண்ட்
ஸ்ரீவில்லிபுத்தூர்:
முன்னாள் எம்.எல்.ஏ. தாமரைக்கனி மற்றும் அவரது குடும்பத்தினர் தொடர்ந்த வழக்கில், ஸ்ரீவில்லிபுத்தூர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் முருகேசனைக் கைது செய்ய வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தாமரைக்கனி மற்றும் அவரது குடும்பத்தினர் ஸ்ரீவில்லிபுத்தூர் கூடுதல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில்கூறியிருப்பதாவது: சென்னையில் திமுக தலைவர் கருணாநிதி கைது செய்யப்பட்டபோது, நானும் எனதுகுடும்பத்தினரும் முன்னெச்சக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டோம்.
இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீஸார் எங்களைக் கைது செய்தனர். அப்போது போலீஸ் காவலில்வைத்து என்னையும், எனது குடும்பத்தினரையும் முருகேசன் கடுமையாக தாக்கினார். இதில் எனது கால் மற்றும்கையில் படுகாயம் ஏற்பட்டு, எலும்பு முறிந்தது.
எனவே இதுதொடர்பாக முருகேசனை விசாத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தார்தாமரைக்கனி.
இதையடுத்து விளக்கம் அளிக்குமாறு கூறி இன்ஸ்பெக்டர் முருகேசனுக்கு நீதிபதி சந்திரபாபு நோட்டீஸ்அனுப்பியிருந்தார். ஆனால் 5 முறை நோட்டீஸ் அனுப்பியும் நீதிமன்றத்தை அவர் மதிக்கவில்லை. நோட்டீசுக்குபதிலும் தரவில்லை. நீதிமன்றத்துக்கும் வரவில்லை.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் முருகேசனைக் கைது செய்யுமாறு நீதிபதி வாரண்ட் பிறப்பித்தார். மேலும் இந்தவழக்கை விசாரணை வரும் 30ம் தேதிக்கு ஒத்திவைத்தார்
-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications