6ம் தேதிக்குப் பின் ஜாமீன் மனு தாக்கல் செய்கிறார் வைகோ
வேலூர்:
வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை அவரது மனைவி ரேணுகாதேவி சந்தித்தார்.
வைகோவின் மகன் துரை வைய்யாபுரி வாரத்தில் பலமுறை அடிக்கடி அவரை சிறையில் சென்று சந்தித்து வருகிறார்.ஆனால், ரேணுகா தேவியை சிறைக்கு வர வேண்டாம் என வைகோ கூறிவிட்டதால் அவர் வராமல் இருந்துவந்தார்.
இந் நிலையில் நேற்று சென்னையிலிருந்து வேலூர் சென்ற ரேணுகாதேவி, கணவர் வைகோவை சந்தித்து கண்கலங்கினார். அவருக்கு தைரியம் சொல்லி அனுப்பி வைத்தார் வைகோ.
கண்ணப்பன், செஞ்சி சந்திப்பு:
இந் நிலையில், சமீபதத்தில் மத்திய அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்த கண்ணப்பன் மற்றும் செஞ்சிராமச்சந்திரன் ஆகியோர் இன்று வைகோவைச் சந்தித்துப் பேசினர்.
பதவி விலகிய பின் வைகோவை இவர்கள் சந்திப்பது இதுவே முதல்முறையாகும்.
பின்னர் கண்ணப்பன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,8 மதிமுக நிர்வாகிகளின் ஜாமீன் மனுக்கள் மீதும் சென்னைஉயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்த பிறகு வைகோ ஜாமீன் மனு தாக்கல் செய்வார். மத்திய அமைச்சர் பதவிகளைராஜினாமா செய்ததற்கு எங்களுக்கு பாராட்டு தெரிவித்தார் வைகோ என்றார்.
நிர்வாகிகள் ஜாமீன்: 6ம் தேதி விசாரணை
இதற்கிடையே, பொடா சட்டத்தில் வைகோவுடன் கைது செய்யப்பட்டு கடந்த 1 வருடமாக சிறையில்வைக்கப்பட்டுள்ள 8 நிர்ர்வாகிகளும் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல்செய்துள்ளனர்.
ஜனவரி 1 முதல் 18ம் தேதி வரை நீதிமன்றத்துக்கு விடுமுறை என்பதால் இந்த மனுக்கள் ஜாமீன் மனுக்கள் மீதானவிசாரணை வரும் 19ம் தேதி தான் விசாரணைக்கு வரவிருந்தது. ஆனால், கடந்த மாதம் உச்சநீதிமன்றம் பிறப்பித்தஉத்தரவில், ஒரு ஆண்டை சிறையில் கழித்தவர்களுக்கு சாதாரண ஜாமீன் விதிமுறைகளே பொருந்தும் என்றுநீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.
அதன் அடிப்படையில், இவர்களின் ஜாமீன் மனுக்களையும் விரைந்து விசாரிக்க வேண்டும் என்று சென்னைஉயர்நீதிமன்ற பதிவாளரிடம் மதிமுக வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு வரும் 6ம் தேதியே ஜாமீன் மனுக்கள் மீது விசாரணை நடத்தவுள்ளது. நீதிபதிபி.டி.தினகரன், நீதிபதி நாகப்பன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் இந்த மனுக்களை விசாரிக்கிறது.
இதில் தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னர் வைகோவும் ஜாமீன் மனு தாக்கல் செய்வார்.
-
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications