அதிமுகவுடன் கூட்டணி வரலாம்: பா.ஜ.க
சென்னை:
தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து பா.ஜ.கவின் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என அக் கட்சியின் தலைவர் வெங்கைய்யா நாயுடு கூறினார்.
அதிமுக- பா.ஜ.க. கூட்டணி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
இந் நிலையில் இன்று சென்னையில் நிருபர்களிடம் பேசிய நாயுடு, அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என தமிழக பா.ஜ.கவினர் விருப்பம் தெரிவித்துள்ளனர். இது குறித்து வரும் 11, 12ம் தேதிகளில் ஹைதராபாத்தில் நடக்கும் பா.ஜ.க. தேசிய செயற்க் குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும்.
பா.ஜ.கவுக்கு எதிராக காங்கிரஸ் எவ்வளவு பெரிய கூட்டணி அமைத்தாலும் கவலை இல்லை. மாநிலங்களில் கோஷ்டிச் சண்டையால் காங்கிரஸ் வலுவிழந்து கிடக்கிறது. அடுத்த பிரதமர் யார் என்பதை சொல்ல முடியாத நிலையில் அக் கட்சி உள்ளது என்றார்.
மேலும் நாடாளுமன்றத்துக்கு முன் கூட்டியே தேர்தல் நடத்த வேண்டும் என பா.ஜ.க தலைவர்கள் விரும்புகின்றனர் என்றும் நாயுடு கூறினார்.
24ம் தேதி நாடாளுமன்றம் கலைப்பு:
இதற்கிடையே தேர்தலை மே மாதத்தில் சந்திக்கும் வகையில் வரும் 24ம் தேதி நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட பா.ஜ.க. திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
21ம் தேதி கூடும் நாடாளுமன்றக் கூட்டத்தை மூன்று நாட்கள் மட்டும் கூட்டிவிட்டு, 24ம் தேதியை அவையைக் கலைத்துவிடுவது என முடிவெடுக்கப்பட்டுள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
யாருடன் கூட்டணி? மாயாவதி பதில்
இதற்கிடையே இன்று சென்னை வந்த பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரும் உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வருமான மாயாவதி தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.
முன்னதாக விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நாடாளுமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது தொடர்பாக வரும் 6ம் தேதி டெல்லியில் முடிவெடுக்கப்படும் என்றார். காங்கிரசுடன் கைகோர்க்க மாயாவதி முன் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது












Click it and Unblock the Notifications