மதுரை உயர் நீதிமன்ற கிளை: 3 நீதிபதிகள் குழு ஆய்வு
மதுரை:
மதுரையில் கட்டப்பட்டு வரும் உயர் நீதிமன்றக் கிளையின் கட்டுமானப் பணிகளை சென்னை உயர் நீதிமன்றத்தைச் சேர்ந்த 3 நீதிபதிகள் குழு ஆய்வு செய்தது.
மதுரை உலகனேரியில் ரூ. 50 கோடி மதிப்பில் சென்னை உயர் நீதிமன்றக் கிளை கட்டப்பட்டு வருகிறது. முக்கால்வாசிப் பணிகள் முடிந்த நிலையில் ஒரு சில பணிகள் இன்னும் பாக்கி உள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் அவ்வப்போது சென்னை உயர் நீதிமன்றத்தைச் சேர்ந்த நீதிபதிகள் குழு மதுரை வந்து கிளை அமைக்கும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறது. இந் நிலையில் 3 நீதிபதிகள் குழு மதுரை வந்து பணிகளை ஆய்வு செய்தது.
நீதிபதிகள் கோவிந்தராஜன், முருகேசன் மற்றும் ஞானப்பிரகாசம் ஆகியோர் அடங்கிய குழு கட்டுமானப் பணிகளைப் பார்வையிட்டு பல்வேறு ஆலோசனைகளைத் தெரிவித்தது. நீதிமன்ற ஊழியர்களின் குடியிருப்பையும் அவர்கள் பார்த்தனர்.
பின்னர் நீதிபதி கோவிந்தராஜன் செய்தியாளர்களிடம் பேசுகையில், கட்டுமானப் பணியில் இன்னும் நிறைய பாக்கி உள்ளது. அரசு கொடுக்க வேண்டிய ரூ. 5 கோடி நிதி இன்னும் வழங்கப்படவில்லை. அது வந்தால் பெரும்பாலான பணிகளை முடித்துவிடலாம் என்றார்.
தங்களது ஆய்வறிக்கையை தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டியிடம் இக் குழுவினர் விரைவில் கொடுக்கவுள்ளனர்.
-
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications